உலக செய்திகள்

ரஷியாவில் ராணுவ சட்டம் அமலா? புதின் பதில்

ரஷியாவில் அதிபர் புதின் ராணுவ சட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவின.

தினத்தந்தி

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போருக்கு எதிராக, ரஷியாவில் பொதுமக்கள் எதிர்ப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ரஷியாவில் அதிபர் புதின் ராணுவ சட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவின.

இதுபற்றி புதின் கருத்து தெரிவிக்கையில், தற்போது எங்களிடம் அப்படி ஒரு நிலை இல்லை. அது எங்களிடம் இருக்காது என்று நம்புகிறேன் என்று கூறினார்.

மேலும் அவர் கூறும்போது, பெரிய அளவிலான வெளிப்புற அச்சுறுத்தல் வந்தால் பயன்படுத்தக்கூடிய பிற சிறப்பு அவசர நிலைகள் உள்ளன. ஆனால் அவற்றை அறிமுகப்படுத்தும் திட்டம் இல்லை என்றும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது