(Credits: AP) 
உலக செய்திகள்

ரஷிய தாக்குதலில் சேதம் அடைந்த கட்டிடத்தில் இருந்து 44 பேர் சடலமாக மீட்பு: உக்ரைன் பகீர் தகவல்

கார்கிவ் பகுதியில் ரஷிய தாக்குதலில் சேதம் அடைந்த ஒரு கட்டிட இடிபாடுகளில் இருந்து 400 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக கார்கிவ் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

கீவ்,

உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாத இறுதியில் போர் தொடுத்தது. தொடர்ச்சியாக உக்ரைன் மீது குண்டு மழை பொழிந்து வரும் ரஷிய படைகள், உக்ரைனின் முக்கிய நகரங்களில் ஒன்றான கார்கிவ் நகரத்தில்

கடந்த மார்ச் மாதம் கடுமையான தாக்குதல் நடத்தியது. அப்போது பல கட்டிடங்களையும் ரஷிய ராணுவம் தகர்த்தது.

இந்த நிலையில், கார்கிவ் பகுதியில் ரஷிய தாக்குதலில் சேதம் அடைந்த ஒரு கட்டிட இடிபாடுகளில் இருந்து 400 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக கார்கிவ் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கார்கிவ் நகர நிர்வாகி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில் இந்த தகவலை தெரிவித்தார்.

அப்பாவி பொதுமக்களுக்கு எதிரான ரஷிய படைகள் நடத்திய மற்றுமொரு கொடூரமான போர்க்குற்றம் இது என்றும் தெரிவித்துள்ளார். எனினும் கார்கிவ் பகுதியில் எந்த இடத்தில் இந்த கட்டிடம் உள்ளது என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை