Image Courtesy: AFP 
உலக செய்திகள்

#லைவ் அப்டேட்ஸ்: மரியுபோல் எஃகு ஆலையைச் சுற்றி போர் நிறுத்தத்தை அறிவித்தது ரஷியா

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மற்றும் பாதுகாப்பு செயலர் ஆகியோரை ஜெலென்ஸ்கி சந்தித்ததாக உக்ரைன் அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

கீவ்,

உக்ரைன் நகரங்களை உருக்குலைத்து வரும் ரஷிய படைகளின் தாக்குதல்கள் 2-வது மாதங்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த போர் தொடர்பாக இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் பின்வருமாறு:-

ஏப்ரல் 25, 6.30 pm

ரெயில், எரிபொருள் மையங்கள் மீது தாக்குதல் தொடுக்கும் ரஷியா

உக்ரைன் மீது ரஷியா கடந்த சில தினங்களாக தாக்குதலை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. கிழக்கு நகரங்களை கைப்பற்றும் முனைப்பில் முக்கிய உட்கட்டமைப்புகள் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் ரெயில் மற்றும் எரிபொருள் மையங்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக உக்ரைனிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஏப்ரல் 25, 5.30 pm

உக்ரைனில் இருந்து மேலும் 45 ஆயிரம் மக்கள் வெளியேறினர்

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்த தொடங்கியதில் இருந்து 52 லட்சம் பேர் உக்ரைனில் இருந்து வெளியேறியுள்ளனர். இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 45 ஆயிரம் பேர் வெளியேறி இருப்பதாக ஐநா தெரிவித்துளது.

ஏப்ரல் 25, 3.30 pm

மரியுபோல் எஃகு ஆலையைச் சுற்றி போர் நிறுத்தத்தை அறிவித்தது ரஷியா

மரியுபோல் எஃகு ஆலையைச் சுற்றி போர்நிறுத்தத்தை ரஷியா அறிவித்துள்ளது. அப்பகுதியில் தஞ்சமடைந்துள்ள பொதுமக்களை வெளியேற்ற அனுமதிக்கும் வகையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷிய துருப்புக்கள் இன்று முதல் ஒருதலைப்பட்சமாக எந்தவொரு தாக்குதலையும் நடத்தாமல், பாதுகாப்பான தூரத்திற்கு துருப்புகளை திரும்பப் பெற்று, குடிமக்கள் வெளியேறுவதை உறுதி செய்யப்படும் எனறு ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 25, 12.30 pm

உக்ரைனுக்கு மேலும் 322 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ராணுவ உதவிகள் வழங்க உள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி, பாதுகாப்புத்துறை மந்திரி

ஏப்ரல் 25, 06.01a.m

ஈஸ்டர் பண்டிகையின் போது போர் அபாயத்திற்கு நடுவில் அமெரிக்க உயர் அதிகாரிகள் உக்ரைனுக்கு வருகை

அமெரிக்காவின் உயர்மட்ட வெளியுறவு மந்திரி மற்றும் பாதுகாப்புத் மந்திரி கீவ்வில் இருப்பதாக உக்ரைனின் அதிபர் மாளிகை கூறியது, இரண்டு மாதங்களுக்கு முன்பு ரஷியா தனது அண்டை நாட்டை ஆக்கிரமித்த பின்னர், கடுமையான சண்டைகள் ஆர்த்தடாக்ஸ் ஈஸ்டர் மீது நிழலைக் காட்டிய பின்னர், அமெரிக்க அதிகாரிகளின் முதல் உயர்மட்ட விஜயத்தை மேற்கொண்டது.

ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து மில்லியன் கணக்கானோர் இடம்பெயர்ந்த நிலையில், போர் மூன்றாவது மாதத்திற்குள் நுழையும் போது வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் பாதுகாப்பு செயலர் லாயிட் ஆஸ்டின் ஆகியோர் வந்துள்ளனர், மேலும் கீவ்வில் பாதிக்கப்பட்ட நகரமான மரியுபோலில் சிக்கியுள்ள உக்ரேனியர்களுக்கு நிவாரணம் தேடித் தந்துள்ளார். மரியுபோலின் பாதுகாப்பு "ஏற்கனவே சரிவின் விளிம்பில் உள்ளது" மற்றும் உக்ரைனுக்கு தாக்குதல் ஆயுதங்கள் தேவைப்படுவதால், ஞாயிறு அன்று ஜெலென்ஸ்கி அமெரிக்க அதிகாரிகளை சந்தித்தார்.

ஏப்ரல் 25, 05.34 a.m

தாக்குதல் ஆயுதங்களுக்கான உக்ரைனின் வேண்டுகோளை அரேஸ்டோவிச் திரும்பத் திரும்பச் சொன்னார், "ஏனென்றால் 'தாக்குதல்கள்' இல்லாத வரை, ஒவ்வொரு நாளும் ஒரு புதியதாக இருக்கும் என்று அவர் கூறினார். மேலும் ஐ.நா அதிகாரிகள் சுமார் 50 பேரின் சட்டவிரோதக் கொலைகளை பொதுமக்கள் ஆவணப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

ஏப்ரல் 25, 04.06 a.m

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் பிளிங்கன், ஆஸ்டினை ஜெலென்ஸ்கி கீவ்வில் சந்தித்தார் - உக்ரைன் அதிபர் அலுவலகம்

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலர் லாயிட் ஆஸ்டின் ஆகியோரை கீவ்வில் சந்தித்தார் என்று அந்நாட்டு அதிபர் அலுவலகம் கூறியது. முன்னதாக நேற்று யூடியூப்பில் பேட்டியளித்த அதிபர் ஆலோசகர் ஒலெக்ஸி அரேஸ்டோவிச், சந்திப்பு இன்று நடைபெறும் என்பதை உறுதிப்படுத்தி இருந்தார்.

ஏப்ரல் 25, 03.53 a.m

முற்றுகையிடப்பட்ட மரியுபோல் ஆலைக்கு அருகில் ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் கேட்டுக்கொண்டுள்ளது.

ஏப்ரல் 25, 02.41 a.m

மரியுபோலில் உள்ள பொதுமக்கள், ராணுவத்தின்ன் கதி குறித்து ரஷியாவுடன் பேச்சுவார்த்தை - உக்ரைன் முடிவு

ரஷியாவுடன் "சிறப்பு" சுற்று பேச்சுவார்த்தைகளை மரியுபோலின் அசோவ்ஸ்டல் எஃகு ஆலையின் நிழலில் நடத்த வேண்டும் என்றும், நகரத்தில் இன்னும் சிக்கியுள்ள பொதுமக்கள் மற்றும் உக்ரேனிய ராணுவங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் உக்ரைன் அதிபர் ஆலோசகர் கூறினார். மரியுபோலில் உடனடி போர்நிறுத்தம், "பல நாள்" மனிதாபிமான தாழ்வாரங்கள் மற்றும் அசோவ்ஸ்டல் ஆலையில் சிக்கியுள்ள உக்ரேனிய ராணுவ வீரர்களை விடுவித்தல் அல்லது இடமாற்றம் செய்வதை நோக்கமாகக் கொண்டதாக அதிபரின் ஆலோசகர் ஒலெக்ஸி அரெஸ்டோவிச் வீடியோ உரையில் தெரிவித்தார்.

ஏப்ரல் 25, 01.16 a.m

மேலும் ஆயுதங்கள் தேவை - மேற்கு நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் ஜெலென்ஸ்கி

உக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, போரினால் பாதிக்கப்பட்ட நாட்டின் தலைநகரில் உயர்மட்ட அமெரிக்க அதிகாரிகளைச் சந்திக்கத் தயாரானபோது, மேற்கு நாடுகளுக்கு அதிக சக்திவாய்ந்த ஆயுதங்களைத் தேவை என்று கேட்டுக்கொண்டார். அதே நேரத்தில் ரஷியப் படைகள் கிழக்கில் தங்கள் தாக்குதல்களைக் தொடர்ந்து நடத்தி வருகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 25, 12.31 a.m

கிழக்கு உக்ரைனில் ரஷிய படைகள் தாக்குதல் தீவிரம்: 8 பேர் பலி

கிழக்கு உக்ரைனில் ரஷிய படைகள் கடும்தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் 8 பேர் பலியாகினர்.

உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி போர் தொடுத்தபோது, இந்தப் போர் ஒரு வார காலத்தில் அல்லது ஒரு 10 நாளில் முடிந்து விடும் என்றுதான் சர்வதேச அரங்கில் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் இந்தப் போர் 2 மாதங்களைக் கடந்து செல்கிறது. ஆயிரக்கணக்கானோர் போரில் பலியாகி உள்ளனர். 51 லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்களில் 29 லட்சம் பேர் போலந்தில் உள்ளனர்.

தலைநகர் கீவை கைப்பற்றும் கனவு நனவாகாத நிலையில், ரஷியாவின் பார்வை இப்போது கிழக்கு உக்ரைன் மீது திரும்பி உள்ளது. அங்கு கடும் போர் நடந்து வருகிறது.

லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் ரஷியா நடத்திய கடும் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டதாகவும், 2 பேர் படுகாயம் அடைந்ததாகவும் பிராந்திய தலைவர் செர்ஹி ஹைடாய் தெரிவித்தார்.

ஹிர்ஸ்கே மற்றும் சோலோட் நகரங்கள் மீது குண்டு வீசி தாக்கியதில் மட்டுமே 6 பேர் கொல்லப்பட்டதாக அவர் கூறினார்.

முடிந்துள்ள வாரத்தில் நாட்டின் கிழக்கு டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷியாவின் பல தாக்குதல்களை உக்ரைன் முறியடித்துள்ளது என்று இங்கிலாந்து ராணுவ உளவுத்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதுபற்றி குறிப்பிடுகையில், ரஷியா பிராந்திய அளவில் சில ஆதாயங்களை அடைந்துள்ளபோதிலும், உக்ரைனிய எதிர்ப்பு அனைத்து வகையிலும் வலுவாக உள்ளது. உக்ரைன் படையினர், ரஷியாவுக்கு குறிப்பிடத்தக்க செலவை ஏற்படுத்தினர். மோசமான மன உறுதியாலும், முந்தைய தாக்குதல்களில் இருந்து படைகளை சீரமைக்க வேண்டியிருப்பதாலும் ரஷியா போர் செயல்திறன் தடுக்கப்படலாம் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உக்ரைனின் பிற நகரங்களிலும் சண்டை நீடிக்கிறது. ரஷிய படைகளிடம் ஆரம்பத்தில் விழுந்த கெர்சன் நகரில் ரஷிய கட்டளைச்சாவடியை அழித்துள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் நடந்தபோது அந்த கட்டளை மையத்தில் 50 ரஷிய படை அதிகாரிகள் இருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் தாக்குதலின்போது அவர்கள் கதி என்ன ஆனது என்பது தெரியவரவில்லை.

இதற்கிடையே உக்ரைனுக்கு ஜெர்மனி கனரக ஆயுதங்கள் வினியோகிப்பதை அந்த நாட்டின் மக்களில் பாதிப்பேர் விரும்பவில்லை என்பது ஒரு கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.

மரியுபோல் நகரை பிடித்து விட்டதாக ரஷியா அறிவித்தபோதும், அங்குள்ள அஜோவ் உருக்காலை இன்னும் வீழ வில்லை. அந்த ஆலையை தகர்க்கும் உத்தரவை ரஷிய அதிபர் புதின் ரத்து செய்துவிட்டதாக முதலில் தகவல் வெளியானாலும், அங்கு தாக்குதல் தொடர்வதாக உக்ரைன் கூறுகிறது. ரஷிய விமானங்கள் அந்த ஆலை மீது தொடர்ந்து குண்டுகளை வீசி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுபற்றி அந்த பிராந்திய ராணுவ துணை தளபதி ஸ்வய டோஸ்லாவம் பாலமர் கூறுகையில், ஆலை மீது ரஷியா கடற்படை பீரங்கிகளைக் கொண்டு தாக்குதல் நடத்துகிறது. டாங்கிகளாலும் சுடுகிறது. ஆலையை தகர்க்க காலாட்படையும் பயன்படுத்தப்படுகிறது. ஆர்தோடாக்ஸ் ஈஸ்டர் பண்டிகைக்கு கூட ரஷியர்கள் தாக்குதலை நிறுத்தவில்லை என குறிப்பிட்டார்.

மரியுபோல் நகரில் சிக்கியுள்ள 1 லட்சம் மக்கள் வெளியேற போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என ஐ.நா. சபையும், செஞ்சிலுவை சங்கமும் வேண்டுகோள் விடுத்துள்ளன. நாம் எவ்வளவு காலம் காத்திருக்கிறோமோ, அவ்வளவு உயிர்கள் ஆபத்தில் இருக்கும் என்று ஐ.நா.வின் உக்ரைன் நெருக்கடி ஒருங்கிணைப்பாளர் அமீன் அவாத் கூறினார்.

செஞ்சிலுவை சங்கம் கூறுகையில், மரியுபோலில் நடந்து வரும் நிகழ்வுகள் ஆழ்ந்த எச்சரிக்கையாக அமைகின்றன. அங்குள்ள பொதுமக்களை சந்திக்கிற நிலை வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

ஆர்த்தோடாக்ஸ் ஈஸ்டர் போர் நிறுத்தத்துக்கு ரஷியா உடன்பட வேண்டும் என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியின் உதவியாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

போப் ஆண்டவர் பிரான்சிஸ்சும் ஆர்த்தோடாக்ஸ் ஈஸ்டர் பண்டிகையையொட்டி போர் நிறுத்தம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆர்த்தோடாக்ஸ் ஈஸ்டர் பண்டிகை, ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் மிக முக்கியமான பண்டிகை என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது