கீவ்,
உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடர்ந்து 13 நாட்களாக தாக்குதல் நடத்தி வருகின்றன. அதேவேளையில் உக்ரைன் ராணுவ வீரர்கள் ரஷிய வீரர்களை எதிர்த்து கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் போர் தொடங்கியதில் இருந்து இதுவரையில் 12 ஆயிரம் ரஷிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. மேலும், ரஷியாவின் 303 பீரங்கிகள், 80 ஹெலிகாப்டர்கள், 48 ராணுவ விமானங்கள் மற்றும் 400-க்கும் ராணுவ வாகனங்கள் உக்ரைன் படையால் அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர 1,036 பாதுகாப்பு கவச உடைகளையும், பல்வேறு திசைகளில் இருந்து வெடிகுண்டு செலுத்தும் 56 கருவிகளையும் சேதப்படுத்தி அழித்துள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.