உலக செய்திகள்

உக்ரைன்-ரஷியா போர்: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண தலீபான்கள் அழைப்பு

உக்ரைன்-ரஷியா போரை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண தலீபான்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

தினத்தந்தி

காபூல்,

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து வருவது சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. போரை உடனடியாக நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டும் என சர்வதேச சமூகம் ரஷியாவை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

20 ஆண்டுகள் உள்நாட்டு போரில் ஈடுபட்டு ஆயுதங்கள் மூலம் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த தலீபான்கள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அழைப்பு விடுத்துள்ளனர்.

இதுபற்றி ஆப்கானிஸ்தானின் தலீபான்கள் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் வன்முறையை தீவிரப்படுத்தக்கூடிய நிலைப்பாடுகளை எடுப்பதை அனைத்து தரப்பினரும் கைவிட வேண்டும். பேச்சுவார்த்தை மற்றும் அமைதியான வழிமுறைகள் மூலம் நெருக்கடியை தீர்க்க இரு தரப்பையும் அழைக்கிறது என தெரிவித்துள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து