உலக செய்திகள்

ரஷிய போர் எதிரொலி; கடும் சரிவை சந்தித்துள்ள உக்ரைனின் பொருளாதாரம்!

உக்ரைனின் பொருளாதாரம் வீழ்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது .

கீவ்,

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் ஒரு மாத காலத்தை கடந்து நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவான அனைத்து நடவடிக்கைகளிலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஈடுபட்டுள்ளன. ரஷியா மீது கடும் பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

இதன் கரணமாக ரஷிய பொருளாதாரம் வீழ்ச்சியை கண்டாலும், மறுமுனையில் உக்ரைனின் பொருளாதாரம் வீழ்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று சர்வதேச நாணய நிதியம்(ஐ எம் எப்) எச்சரித்துள்ளது .

உக்ரைனின் பொருளாதாரம், இந்த ஆண்டு தொடக்கத்தின் முதல் கால்பங்கு பகுதியில், 16 சதவீதம் சுருங்கியது. ரஷியாவின் படையெடுப்பின் விளைவாக, 2022ம் ஆண்டு உக்ரைனின் பொருளாதாரம் 40 சதவீதம் வரை சரிவை சந்திக்கும் அபாயம் உள்ளதாக உக்ரைன் பொருளாதார அமைச்சகம் கவலையுடன் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, தொலைதூரத்திலிருந்து கொண்டு பணி செய்ய முடியாத பகுதிகள் மற்றும் நேரடியாக பணியாளர்கள் சென்று பணிபுரிய வேண்டிய துறைகள் தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன என்று உக்ரைன் பொருளாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...