கோப்புப்படம் 
உலக செய்திகள்

ரஷியாவின் மின்னணு வாக்குப்பதிவு வலைத்தளம் மீது சைபர் தாக்குதல்

ஆன்லைன் மூலம் வாக்களிக்கும் வகையில் புதிய வலைத்தளத்தை ரஷிய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி இருந்தது.

தினத்தந்தி

மாஸ்கோ,

ரஷியாவில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான பொது தேர்தல் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. தேர்தல் முடிவுகள் இன்று (திங்கட் கிழமை) வெளியாகும் என தெரிகிறது. தேர்தலில் 50 சதவீத வாக்குப் பதிவை எந்த வேட்பாளரும் பெறாத பட்சத்தில் 2-ம் கட்ட தேர்தல் நடத்தப்படும். வருகிற மே மாதம் 7-ந்தேதி புதிய அதிபருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்படும்.

இந்தமுறை ஆன்லைன் மூலம் வாக்களிக்கும் வகையில் புதிய வலைத்தளத்தை ரஷிய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியது. இதன்மூலம் போர் முகாம்கள் போன்ற இடங்களில் உள்ள வாக்காளர்கள், தொலைத்தூர மின்னணு வாக்குப்பதிவு முறைப்படி வாக்களித்தனர்.

இந்தநிலையில் வாக்குப்பதிவு வலைத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷியா தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 1 லட்சத்து 60 ஆயிரம் தாக்குதல்கள் கணக்கிடப்பட்டுள்ளதாகவும், அதனை ரஷிய அரசின் தொழில்நுட்ப நிபுணர்கள் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு