உலக செய்திகள்

நாட்டின் இறையாண்மையில் தலையிட ஐ.நா. அமைப்புக்கு எந்த உரிமையும் இல்லை; மியான்மர் ராணுவ தளபதி

நாட்டின் இறையாண்மையில் தலையிட ஐ.நா. அமைப்புக்கு எந்த உரிமையும் இல்லை என மியான்மர் ராணுவ தலைமை தளபதி கூறியுள்ளார்.

தினத்தந்தி

யாங்கன்,

மியான்மரில் ராகைன் நகரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் அகதிகளாக வசித்து வந்தனர். இந்த நிலையில் அந்நாட்டின் ராணுவம் அவர்கள் மீது இனஅழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுகளை மியான்மர் அரசு மறுத்துள்ளது. ஆனால் செய்தியாளர்கள் மற்றும் ஐ.நா. புலனாய்வு அமைப்பினர் சம்பவம் நடந்த பகுதிக்கோ அல்லது இனஅழிப்பு பற்றி அகதிகளிடம் புலனாய்வு விசாரணை மேற்கொள்ளவோ தடை விதித்துள்ளது.

இந்த நிலையில், மியான்மர் நாட்டில் ரோஹிங்யா சிறுபான்மையின மக்களை அந்நாட்டு ராணுவம் கொன்று குவித்து இனபடுகொலையில் ஈடுபட்டது பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐ.நா. அமைப்பு கடந்த வாரம் தெரிவித்திருந்தது.

இதுபற்றி அந்நாட்டு ராணுவ தலைமை தளபதி மின் ஆங் லைங் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், ஒரு நாட்டின் இறையாண்மையில் தலையிடவோ அல்லது முடிவுகளை எடுக்கவோ எந்தவொரு நாட்டுக்கோ, அமைப்புக்கோ அல்லது குழுவுக்கோ உரிமை இல்லை என கூறியுள்ளார்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை