உலக செய்திகள்

மகாத்மா காந்தியின் பிறந்த நாள் - சர்வதேச அகிம்சை தினம்: ஐ.நா பொதுச்செயலாளர் வாழ்த்துச் செய்தி!

தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்த தினம், சர்வதேச அகிம்சை தினமாக இன்று கொண்டாடப்படுகிறது.

தினத்தந்தி

நியூயார்க்,

தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்த தினம், சர்வதேச அகிம்சை தினமாக இன்று (அக்டோபர் 2-ந் தேதி) கொண்டாடப்படுகிறது.அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் அமைந்துள்ள ஐ.நா. சபையின் தலைமையகத்தில் கொண்டாடப்பட்டது.

இந்த நிலையில், ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் டுவிட்டரில் பகிர்ந்துள்ளதாவது:-

சர்வதேச அகிம்சை தினத்தில், மகாத்மா காந்தியின் பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம். அத்துடன் அனைவராலும் பகிர்ந்து கொள்ளப்படும் மகாத்மா காந்தி காட்டிய அமைதி, மரியாதை மற்றும் அத்தியாவசிய கண்ணியத்தின் மதிப்புகளையும் கொண்டாடுகிறோம்.

இவற்றை உள்வாங்கி கலாசாரங்களைக் கடந்து செயல்படுவதன் மூலம் இன்றைய சவால்களை நாம் முறியடிக்க முடியும்.

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை