உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் ஐ.நா. அமைப்பு பணியாளர்கள் வாகனம் மீது தாக்குதல்; 5 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் ஐ.நா. அமைப்பு பணியாளர்கள் சென்ற வாகனம் மீது நடந்த தாக்குதலில் 5 பேர் பலியாகி உள்ளனர்.

காபூல்,

ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான அரசு நடந்து வருகிறது. தலீபான் பயங்கரவாதிகளால் அந்நாட்டு மக்கள் பல்வேறு துயரங்களை சந்தித்து வருகின்றனர். அந்நாட்டின் தலைநகர் காபூலில் சுரோபி மாவட்டத்தில் காபூல்-ஜலாலாபாத் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வாகனம் மீது திடீரென தாக்குதல் நடத்தப்பட்டது.

அதில், ஐக்கிய நாடுகள் அமைப்பின் பணியாளர்கள் சென்று கொண்டிருந்தனர். இந்த தாக்குதலில் அந்த அமைப்பின் பணியாளர்கள் 5 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு ஐ.நா.வின் ஆப்கானிஸ்தானுக்கான உதவி இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. எனினும், இந்த தாக்குதலில் ஐ.நா. அமைப்பின் அதிகாரிகள் யாரும் காயமடையவில்லை என்றும் தெரிவித்து உள்ளது. இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்க முன்வரவில்லை.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு