உலக செய்திகள்

குழந்தை திருமணங்களில் பாதிக்கு மேல் இந்தியா உள்பட 5 நாடுகளில் நடைபெறுகிறது -யுனிசெப் அறிக்கை-

குழந்தை திருமணங்களில் பாதிக்கு மேல் இந்தியா உள்பட 5 நாடுகளில் நடைபெறுகிறது என யுனிசெப் அறிக்கை கூறுகிறது.

தினத்தந்தி

புதுடெல்லி

ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச குழந்தைகள் அவசர நிதியம் (யுனிசெஃப்) வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறி இருப்பதாவது:-

உலகில் நடக்கும் குழந்தை திருமணங்களில் பாதிக்கு மேற்பட்டவை இந்தியா உள்பட ஐந்து நாடுகளில் நடைபெறுகிறது.

உலகில் இதுவரை 65 கோடி சிறுமிகளும் பெண்களும் குழந்தை பருவத்தில் திருமணம் செய்து கொண்டனர் . அவர்களில் பாதி பேர் வங்காளதேசம், பிரேசில், எத்தியோப்பியா, இந்தியா மற்றும் நைஜீரியாவில் உள்ளனர் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

"கடந்த பத்து ஆண்டுகளில், உலகளவில் குழந்தைகளாக திருமணம் செய்து கொண்ட இளம் பெண்களின் விகிதம் 15 சதவீதம் குறைந்துள்ளது, இது கிட்டத்தட்ட 4 ல் 1 ல் இருந்து 5 ல் 1 ஆக இருந்தது, இது 2.5 கோடி திருமணங்களுக்கு சமமானதாகும்.

துணை சஹாரா ஆப்பிரிக்காவில் குழந்தை திருமணத்தின் அளவு மிக அதிகமாக இருப்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது, அங்கு 35 சதவீத இளம் பெண்கள் 18 வயதிற்கு முன்பே திருமணம் செய்து கொள்கின்றனர்.அதைத் தொடர்ந்து தெற்காசியா உள்ளது. அங்கு கிட்டத்தட்ட 30 சதவீத பெண்கள் 18 வயதிற்கு முன் திருமணம் செய்து கொள்கின்றனர்.

லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் குழந்தை திருமணங்களில் சுமார் 24 சதவீதமும், மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் 17 சதவீத குழந்தைத் திருமணங்களும் நடைபெறுகின்றன. கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் சுமார் 12 சதவீத குழந்தை திருமணங்கள் நடைபெறுகின்றன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பள்ளிகளை மூடுவது, பொருளாதார மன அழுத்தம், பெற்றோரின் இறப்பு மற்றும் கர்ப்பம் ஆகியவை குழந்தை திருமண அபாயத்தை அதிகரிக்கும் என்று அறிக்கை கூறியுள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு