உலக செய்திகள்

மவுரீசியஸ் நாட்டிற்கு சென்றடைந்தார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மவுரீசியஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

தினத்தந்தி

போர்ட் லூயிஸ்,

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மாலத்தீவு நாட்டின் அதிபர் இப்ராகிம் முகமது சோலிஹ் விடுத்த அழைப்பை ஏற்று 2 நாள் பயணமாக மாலத்தீவிற்கு சென்றார். இந்த சுற்றுப்பயணத்தின் போது இந்தியா சார்பில் ஒரு லட்சம் டோஸ்கள் கொரோனா தடுப்பூசி மருந்துகளை மாலத்தீவுக்கு வழங்கினார்.

மேலும் மாலத்தீவு ராணுவ மந்திரி மரிய திதியை சந்தித்து பேசிய அவர், இந்தியா-மாலத்தீவு இடையில் ரூ.362 கோடி மதிப்பிலான ராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதனை தொடர்ந்து இன்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மவுரீசியஸ் நாட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு மவுரீசியஸ் வெளியுறவுதுத்துறை அமைச்சர் ஆலன் கனூ அவரை வரவேற்றார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜெய்சங்கர், மவுரீசியஸ் நாட்டில் தான் மேற்கொண்டிருக்கும் சுற்றுப்பயணம் பயனுள்ளதாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்