உலக செய்திகள்

இங்கிலாந்தில் ஊரடங்கு உத்தரவு ஜூன் 1ம் தேதி வரை நீட்டிப்பு - பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு

இங்கிலாந்தில் ஊரடங்கு உத்தரவை ஜூன் 1ம் தேதி வரை நீட்டிப்பதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

தினத்தந்தி

லண்டன்,

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 41,56,608 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 2,82,823 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலக அளவில் அமெரிக்காவை மிகவும் பாதித்துள்ள இந்த வைரஸ் மற்றொரு வல்லரசு நாடான இங்கிலாந்தையும் விட்டு வைக்கவில்லை. அங்கும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இங்கிலாந்தில் கொரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 31,855 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 16 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்றுக்கான மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் சுமார் 2,19,183 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 31 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் இங்கிலாந்தில் ஊரடங்கு உத்தரவை ஜூன் 1ம் தேதி வரை நீட்டிப்பதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். மேலும் சில பொது இடங்கள் ஜூலை 1ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஊரடங்கை முன்னதாக முடிவுக்கு கொண்டுவந்தால், இங்கிலாந்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு லட்சம் மரணங்கள் நிகழும் என இங்கிலாந்து அரசாங்கத்தின் அறிவியல் ஆலோசகர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்