உலக செய்திகள்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு: லண்டனில் இந்திய வம்சாவளியினர் பேரணி

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக லண்டனில் இந்திய வம்சாவளியினர் பேரணி நடத்தினர்.

லண்டன்,

குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இது மத அடிப்படையில் துன்புறுத்தலுக்கு ஆளாகி, பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து இந்தியா வந்த முஸ்லிம்கள் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்துள்ளது. இந்த சட்டத்துக்கு எதிராக இந்தியாவில் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. டெல்லி, உத்தர பிரதேசம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கடும் போராட்டங்கள் நடைபெற்றன.

குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாகவும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. வெளிநாடுகளிலும் இது போன்ற பேரணிகள் நடந்து வருகின்றன. பிரிட்டன் தலைநகர் லண்டனில் குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாக இந்தியர்கள் பேரணி நடத்தினர். லண்டனில் உள்ள நாடாளுமன்ற சதுக்கத்தில் திரண்ட இந்திய வம்சாவளியினர், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பேரணியாக சென்றனர். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பினர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு