உலக செய்திகள்

லிபியாவில் ஐ.நா. ஆதரவு பெற்ற அரசு படைக்கும், கிளர்ச்சி படைக்கும் இடையே கடும் மோதல் - 11 வீரர்கள் பலி

லிபியாவில் ஐ.நா. ஆதரவு பெற்ற அரசு படைக்கும், கிளர்ச்சி படைக்கும் இடையே நடந்த கடும் மோதலில் அரசு படையை சேர்ந்த 11 வீரர்கள் பலியாயினர். மேலும் கிளர்ச்சி படையினர் 7 பேரும் பலியாகினர்.

தினத்தந்தி


* லிபியாவின் தலைநகர் திரிபோலியில் ஐ.நா. ஆதரவு பெற்ற அரசு படைக்கும், கிளர்ச்சி படைக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் அரசு படையை சேர்ந்த 11 வீரர்களும், கிளர்ச்சி படையினர் 7 பேரும் பலியாகினர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர்.

* இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், புதிய அரசை அமைப்பது தொடர்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சிகளுடன் அதிபர் ருவென் ரிவ்லின் பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளார்.

* அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் உள்ள லான்கேஸ்டர் நகரில் இரவு நேர கேளிக்கை விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிர் இழந்தனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

* எகிப்து நாட்டில் அதிபர் பட்டா அல் சிசியை பதவி விலக வலியுறுத்தி போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. நேற்றைய போராட்டத்தின் போது, போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது. இதில் பலர் படுகாயம் அடைந்தனர்.

* கேமரூன் நாட்டின் துவாலா துறைமுகம் அருகே சென்றுகொண்டிருந்த ஜெர்மன் நாட்டு சரக்கு கப்பலில் கடந்த மாத இறுதியில் கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி அதில் இருந்த ரஷியாவை சேர்ந்த 3 பேர் உள்பட 8 மாலுமிகளை கடத்தி சென்றனர். தற்போது அவர்கள் 8 பேரையும் கடற்கொள்ளையர்கள் விடுவித்துவிட்டனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை