Image courtesy : Reuters 
உலக செய்திகள்

2019 ஆம் ஆண்டில் உலகளாவிய ஆயுத சந்தை முழுவதையும் ஆக்கிரமித்த அமெரிக்கா-சீனா

அமெரிக்காவும் சீனாவும் 2019 ஆம் ஆண்டில் உலகளாவிய ஆயுத சந்தை முழுவதையும் ஆக்கிரமித்து உள்ளன.

ஸ்டாக்ஹோம்

உலகில் பாதுகாப்புக்காக அதிகம் செலவும் நாடுகளில் ஒன்று சீனா . தற்போது அது மட்டுமல்லாமல், சீனா ஒரு சிறந்த ஆயுத விற்பனையாளராகவும் மாறி வருவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

புதிய ஆய்வு புள்ளி விவரம் ஒன்றில் சீனா இப்போது உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஆயுத உற்பத்தியாளராக உள்ளது - அமெரிக்காவிற்கு அடுத்தபடியாகவும், ரஷியாவை விட அதிகமாகவும் ஆயுதங்களை உற்பத்தி செய்கிறது.

உலக அளவில் ஆயுத விற்பனை குறித்து சுவீடன் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (சிப்ரி) அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அமெரிக்காவும் சீனாவும் 2019 ஆம் ஆண்டில் உலகளாவிய ஆயுத சந்தை முழுவதையும் ஆக்கிரமித்து உள்ளன.

அமெரிக்காவை தளமாக கொண்ட ஆயுத நிறுவனங்கள் 2019 ஆம் ஆண்டில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்து உள்ளன. லாக்ஹீட் மார்ட்டின், போயிங், நார்த்ரோப் க்ரூமன், ரேதியோன் மற்றும் ஜெனரல் டைனமிக்ஸ் ஆகியவை மொத்த ஆயுத விற்பனையில் மொத்தம் 166 பில்லியன் டாலரில் 137 பில்லியன் டாலருக்கு விறபனை செய்து உள்ளன.

ஒட்டுமொத்தமாக, இந்த துறையின் 25 மிகப்பெரிய உற்பத்தியாளர்களில் 12 அமெரிக்க நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இது முதல் 25 பேரின் ஒருங்கிணைந்த ஆயுத விற்பனையில் 61 சதவீதம் ஆகும்.

சீனா இரண்டாவது இடத்தைபிடித்து உள்ளது. கடந்த ஆண்டு சீனா 16 சதவீதம் ஆயுத விற்பனை செய்து உள்ளது. சீன ஆயுதங்களை உற்பத்தி செய்யும் நான்கு நிறுவனங்கள் முதல் 25 தரவரிசையில் இடம் பிடித்து உள்ளன. முதல் 10 இடங்களில் மூன்று நிறுவனங்கள் உள்ளன.

நாட்டின் நான்கு பெரிய நிறுவனங்களின் ஆயுத விற்பனை 2019 ல் 4.8 சதவீதம் உயர்ந்து உள்ளது. ஆயுத விற்பனை 2018 ல் 56.7 பில்லியன் டாலராக இருந்தது.

பட்டியலில் சீனாவின் விமானத் தொழில் கழகம் (6 வது இடம் ); சீனா எலெக்ட்ரானிக்ஸ் டெக்னாலஜி குரூப் கார்ப்பரேஷன் (8 வது இடம் ); சீனா நார்த் இண்டஸ்ட்ரீஸ் குரூப் கார்ப்பரேஷன் (9 வது இடம் ); மற்றும் சீனா சவுத் இண்டஸ்ட்ரீஸ் குரூப் கார்ப்பரேஷன் (24 வது இடம் ) இடம்பெற்று உள்ளன.

"சீனா இராணுவ நவீனமயமாக்கல் திட்டங்களால் சீன ஆயுத நிறுவனங்கள் பயனடைகின்றன" என்று சிப்ரி நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் நான் தியான் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முதல் 25 ஆயுத நிறுவனங்களில் பிரான்சின் டசால்ட் ஏவியேஷன் குழு இடம்பெற்றது இதுவே முதல் முறையாகும். இது 2018 ஆம் ஆண்சை விட ஆயுத விற்பனையில் 105 சதவீதம் அதிகரித்து உள்ளது.

ரபேல் போர் விமானங்களை ஏற்றுமதி செய்வதில் டசால்ட் இந்த தரவரிசையில் அதிகரித்ததற்கு காரணம் என சிப்ரி கூறி உள்ளது.

25 நிறுவனங்களின் ஆயுத மற்றும் இராணுவ சேவைகளின் மொத்த விற்பனை 2019 இல் 361 பில்லியன் டாலர்களை ஈட்டியது, இது 2018 ஐ விட 8.5 சதவீதம் அதிகரிப்பு ஆகும்.

முதல் முறையாக ஒரு மத்திய கிழக்கை சேர்ந்த நாடு முதல் 25 தரவரிசையில் இடம் பெற்று உள்ளது.ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த எட்ஜ் என்ற நிறுவனம் 22 வது இடத்தில் உள்ளது, இந்து மொத்த ஆயுத விற்பனையில் 1.3 சதவீதம் ஆகும்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு