உலக செய்திகள்

வியட்நாமிற்கு 20 லட்சம் ‘மாடர்னா’ தடுப்பூசிகளை அனுப்பி வைத்தது அமெரிக்கா

‘கோவேக்ஸ்’ திட்டத்தின் கீழ் வியட்நாமிற்கு அமெரிக்க அரசு 20 லட்சம் ‘மாடர்னா’ தடுப்பூசிகளை அனுப்பி வைத்துள்ளது.

தினத்தந்தி

ஹனாய்,

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் உலக நாடுகளுக்கு உதவும் வகையில் அமெரிக்க அரசு சார்பில் 8 கோடி கொரோனா தடுப்பூசிகள் உலக நாடுகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் என அதிபர் ஜோ பைடன் அறிவித்திருந்தார். தடுப்பூசி பற்றாக்குறை நிலவி வரும் நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அடுத்த 6 மாதங்களுக்குள் தடுப்பூசி மற்ற நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இதன்படி அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட மாடர்னா, ஜான்சன் & ஜான்சன் மற்றும் பைசர் ஆகிய தடுப்பூசிகளை இந்தோனேசியா, நேபாளம், பூட்டான், மலேசியா, வியட்நாம் உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு அனுப்பி வைப்பது குறித்த அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டது.

இந்த நிலையில் வியட்நாம் நாட்டிற்கு அமெரிக்க அரசு சார்பில் அனுப்பப்பட்ட 20 லட்சம் மாடர்னா தடுப்பூசிகள் இன்று சென்றடைந்துள்ளன. கோவேக்ஸ் திட்டத்தின் கீழ் அதிபர் ஜோ பைடன் அறிவித்தபடி இந்த தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளதாக வியட்நாமில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு