உலக செய்திகள்

அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - 3 வீரர்கள் பலி

அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானதில் அதில் இருந்த 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

தினத்தந்தி

வாஷிங்டன்,

அமெரிக்காவின் மின்னசோட்டா பகுதியில் அந்நாட்டு ராணுவத்திற்கு சொந்தமான யு.என் - 60 பிளாக் ஹாக் ரக ஒன்று நேற்று சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டிருந்தது. அந்த ஹெலிகாப்டரில் மூன்று ராணுவ வீரர்கள் இருந்தனர்.

இந்த நிலையில், தரைக் கட்டுப்பாட்டு தளத்துடனான தனது தொடர்பை ஹெலிகாப்டர் இழந்தது.

இதையடுத்து, மின்னிபோலிஸ் நகரிலிருந்து 95 கி.மீ தொலைவில் உள்ள செயின்ட் கிளவுடு பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிக் கிடந்தது தெரியவந்தது. இந்த விபத்தில் அந்த ஹெலிகாப்டரில் இருந்த மூன்று வீரர்கள் உயிரிழந்தனர்.

மின்னசோட்டா தேசிய பாதுகாப்புப்படை வீரர்கள் உயிரிழந்தது அவர்களது குடும்பத்தாருக்கும் நமக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என மின்னசோட்டா தேசிய பாதுகாப்புப்படையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பகுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை