* பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குவட்டாவில் ராணுவ வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் ஒரு பெண் உள்பட 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சண்டையில் 5 ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
* ஜப்பான் நாட்டின் முன்னாள் ராணி மிச்சிகோவுக்கு, மார்பக புற்றுநோய்க்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவர் நலமாக இருக்கிறார்.
* ஈராக்கின் வடக்கு பகுதியில் உள்ள நினேவே மாகாணத்தில் அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய வான்தாக்குதலில் 9 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
* மாலி நாட்டில் உள்ள மோப்தி பிராந்தியத்தில் சாலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து சிதறியதில் அந்த வழியாக வந்த பஸ் சிக்கியது. இந்த குண்டு வெடிப்பில் பஸ்சில் பயணம் செய்த 14 பேர் உடல் சிதறி உயிர் இழந்தனர்.
* சிறைப்பிடிக்கப்பட்ட இங்கிலாந்து நாட்டின் சரக்கு கப்பலில் இருந்த மாலுமிகள் 7 பேரை ஈரான் அரசு விடுதலை செய்தது.