இதை கருத்தில்கொண்டு, அத்தகைய நபர்களுக்கு பைசர் அல்லது மாடர்னா தடுப்பூசிகளில் 3-வது டோஸ் போட அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர அனுமதி அளித்துள்ளது. அதன்மூலம் அவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும் என்று கருதப்படுகிறது. மற்றவர்களுக்கு 2 டோஸ்களிலேயே போதிய பாதுகாப்பு கிடைப்பதால், இன்னொரு டோஸ் தேவையில்லை என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் ஆணையர் (பொறுப்பு) ஜேட் உட்காக் தெரிவித்தார்.