உலக செய்திகள்

“தங்கள் தவறான செயல்களுக்காக அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா தக்க விலையை கொடுக்க வேண்டியிருக்கும்” - சீனா எச்சரிக்கை

அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அரசியல் செய்வதற்காக பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை பயன்படுத்துவதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.

சிட்னி,

சீன தலைநகர் பீஜிங்கில் அடுத்த ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. சீனாவில் இன சிறுபான்மையினருக்கு எதிரான மனித உரிமை மீறல்களை கண்டித்து ஒலிம்பிக் போட்டிகளை முழுமையாக புறக்கணிக்க வேண்டும் என மனித உரிமை சங்கங்கள் உலக நாடுகளை கேட்டு கொண்டிருந்த நிலையில், பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளை தூதரக ரீதியில் புறக்கணிப்பதாக அமெரிக்கா அறிவித்தது.

இது குறித்து வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பாளர் ஜென் சாகி கூறியிருப்பதாவது;-

ஷின்ஜியாங்கில் நடக்கும் இனப்படுகொலை மற்றும் மனித நேயத்திற்கு எதிரான குற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சீன தலைநகர் பீஜிங்கில் 2022ம் ஆண்டு நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை தூதரக ரீதியில் புறக்கணிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

இதன் மூலம், ஒலிம்பிக் தொடரில் அமெரிக்க வீரர்கள் பங்கேற்பார்கள். ஆனால், ஒலிம்பிக் சார்ந்த நிகழ்ச்சிகளில், எந்த அதிகாரியையும் அமெரிக்கா அனுப்பி வைக்காது. இதே கொள்கை, பீஜிங்கில் நடக்க உள்ள, குளிர்கால பாராலிம்பிக் போட்டிகளுக்கும் பொருந்தும்.

ஒலிம்பிக் போட்டிக்காக ஆண்டுக்களக்கில் அமெரிக்க வீரர்கள் பயிற்சி எடுத்த நிலையில், ஒலிம்பிக் போட்டிகளை மொத்தமாக புறக்கணிப்பது என்பது சரியான நடவடிக்கையாக இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்காவை தொடர்ந்து இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளும் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை தூதரக ரீதியில் புறக்கணிக்க முடிவு செய்துள்ளன. இது குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அமெரிக்காவுடன் இணைந்து ஆஸ்திரேலியாவும் பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை தூதரக ரீதியில் புறக்கணிக்க உள்ளது. சீனாவுடனான ஆஸ்திரேலியாவின் உறவு சில வருடங்களாகவே முறிவை கண்டுள்ள நிலையில் இந்த முடிவு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தாது.

ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு முயற்சிகளை சீனா கடுமையாக விமர்சித்து வருகிறது. அதிலும் குறிப்பாக அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களைப் பெறுவதற்கான எங்கள் முடிவை சீனா சாடியுள்ளது என்று கூறியுள்ளார்.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில், பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கை தூதரக ரீதியில் புறக்கணிக்க இங்கிலாந்து முடிவு செய்துள்ளது. அமைச்சர்கள், அதிகாரிகள் யாரும் அதில் கலந்து கொள்ள மாட்டார்கள். விளையாட்டு புறக்கணிப்புகள் விவேகமானவை என்று நான் நினைக்கவில்லை, அது அரசாங்கத்தின் கொள்கையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்புகள் வெளியானதையடுத்து, சீனா இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் ஷின்ஜியாங் மாகாணத்தின் மேற்கு பகுதிகளில் இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்கள் நடப்பதாக வெளியான குற்றச்சாட்டுகளையும் சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இது குறித்து சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில் இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அரசியல் செய்வதற்காக ஒலிம்பிக் போட்டிகளை பயன்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா தங்கள் தவறான செயல்களுக்காக தக்க விலையை கொடுக்க வேண்டியிருக்கும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு