உலக செய்திகள்

“உக்ரைன் மீதான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்” - இம்ரான்கானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

உக்ரைன் மீதான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று ரஷியா சென்றுள்ள இம்ரான்கானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

தினத்தந்தி

வாஷிங்டன்,

உலக நாடுகளின் கவனம் எல்லாம் உக்ரைன் மற்றும் ரஷியா மீது திரும்பி உள்ளது. ரஷியா போரைத் தவிர்க்குமா என்ற தவிப்பு உச்சத்தில் இருந்தபோது, நேற்று முன்தினம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் 2 நாள் அரசுமுறைப்பயணமாக ரஷியாவுக்கு புறப்பட்டுச்சென்றார்.

நேற்று காலை அவர் ரஷிய தலைநகர் மாஸ்கோவுக்கு போய்ச் சேர்ந்தார். அங்கு அவரை ரஷிய உயர் அதிகாரிகள் வரவேற்றனர். 23 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் பிரதமர் ஒருவர், ரஷியா சென்றிருப்பது இதுவே முதல் முறை ஆகும். முன்னதாக வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவரிடம் இம்ரான்கான் மாஸ்கோ சென்றிருப்பது பற்றியும், அவர் ரஷிய அதிபர் விளாமிர் புதினைச் சந்தித்து பேசுவது குறித்தும் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு நெட் பிரைஸ் பதில் அளித்து கூறியதாவது:-

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் ரஷிய பயணம் குறித்து அறிந்துள்ளோம். உக்ரைன் மீதான ரஷியாவின் புதுப்பிக்கப்பட்ட படையெடுப்பு தொடர்பான எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் பாகிஸ்தானுக்கு தெரியப்படுத்தி உள்ளோம்.

மேலும் போர் தொடர்பான தூதரக ரீதியிலான எங்கள் முயற்சிகள் குறித்தும் நாங்கள் அவர்களுக்கு விளக்கி இருக்கிறோம். உக்ரைன் மீதான ரஷியாவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்பது பொறுப்பான ஒவ்வொரு நாட்டின் கடமை ஆகும். உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை பாகிஸ்தானுக்கு தெரிவித்தாகி விட்டது. பாகிஸ்தானுடனான தனது நீண்ட கால கூட்டாண்மை மற்றும் ஒத்துழைப்பை அமெரிக்காவின் நலன்களுக்கு முக்கியமானதாக அமெரிக்கா கருதுகிறது என்று அவர் கூறினார்.

ரஷிய படைகள், உக்ரைன் நாட்டுக்குள் நுழைந்துள்ள இந்த நெருக்கடியான தருணத்தில் ரஷிய அதிபர் புதினை சந்தித்துப்பேசும் முதல் உலகத்தலைவர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்தான்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து