உலக செய்திகள்

புதிய சட்டத்தின் கீழ் மசூத் அசார், ஹபீஸ் சயீத் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டதற்கு அமெரிக்கா பாராட்டு

புதிய சட்டத்தின் கீழ் மசூத் அசார், ஹபீஸ் சயீத் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டதற்கு அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம்-1967, பயங்கரவாத செயல்களுக்காக ஒரு இயக்கத்தை தடை செய்வதற்கு வழி வகிக்கிறது. ஒரு இயக்கத்தை மட்டுமே பயங்கரவாத இயக்கமாக அறிவிக்க முடியும். அதில் உள்ள தனிநபர்களை பயங்கரவாதிகளாக அறிவிக்க முடியாத நிலை இருந்தது.

இந்த குறையைப் போக்க, அந்த சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்தது. இந்த திருத்த மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த மாதம் நிறைவேறியது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளித்ததால், அச்சட்டம் அமலுக்கு வந்தது.

இதையடுத்து, அந்த புதிய சட்டத்தின்கீழ், ஜெய்ஷ் இ முகமது இயக்க தலைவர் மசூத் அசார், லஷ்கர் இ தொய்பா நிறுவனர் ஹபீஸ் சயீத், மும்பை தாக்குதல் குற்றவாளி ஜாகி உர் ரகுமான் லக்வி, நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் ஆகியோரை தனிநபர் பயங்கரவாதிகளாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. புதிய சட்டப்படி, பயங்கரவாதிகளாக அறிவிக்கப்படும் முதலாவது நபர்கள் இவர்களே ஆவர் என்று மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்த நிலையில், இந்தியாவின் மேற்கூறிய நடவடிக்கைக்கு அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது. பயங்கரவாதத்தை அழிக்கும் இந்தியா, அமெரிக்காவின் கூட்டு முயற்சியை புதியச் சட்டம் மேலும் விரிவுப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு