வாஷிங்டன்,
அமெரிக்க அதிபர் தேர்தலில் 306 இடங்களில் ஜோ பைடனும், தற்போதைய அதிபர் டிரம்ப் 232 இடங்களிலும் வெற்றி பெற்றனர். அமெரிக்காவில் அதிபராவதற்கு எல்க்டோரெல்க் கொலேஜ் ங்கீகாரமும் அவசியமானது.
இதன்படி, கலிபோர்னியாவில் 55 எலக்டோரல் கொலேஜ் வாக்குகளை ஜோ பைடன் பெற்றார். இதன் காரணமாக 270 தேர்தல் வாக்குகளை பெற்று அதிபர் பதவியை கைப்பற்றுவதை ஜோ பைடன் மீண்டும் உறுதி செய்தார். இதனிடையே தேர்தலை எதிர்த்து டிரம்ப் தரப்பில் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டதால், அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்பதில் சட்டரீதியான சிக்கல் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை எனக்கூறப்படுகிறது.
இதன்படி ஜோ பைடன் வரும் 20-ம் தேதி பதவியேற்க உள்ளதால் அவரது தேர்தல் வெற்றியை உறுதி செய்ததற்கான சான்றிதழை வழங்கும் பணிகளை காங்கிரஸ் மேற்கொண்டு வருகிறது. பைடனின் வெற்றியை உறுதி செய்வதற்கான சான்றிதழை வழங்க எந்த தடையும் விதிக்கப்போவதில்லை என துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனின் உள்ள வெள்ளை மாளிகை நோக்கி ஆயிரக்கணக்கான டிரம்பின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் கலைந்து செல்லும்படி உத்தரவிட்டனர். கலைய மறுத்த போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாகிசூடு நடத்தியதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
இந்நிலையில் டிரம்ப் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகையை முற்றுகையிட்ட சம்பவத்திற்கு அமெரிக்க காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஜோ பைடன் தனது டுவிட்டரில், நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன்: தலைநகரில் நிகழும் குழப்பத்திற்கு யாரையும் நான் காரணமாக கூறவில்லை. நாம் பார்ப்பது சட்டவிரோதத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிறிய எண்ணிக்கையிலான விரோதிகள். இது கருத்து வேறுபாடு அல்ல, இது கோளாறு. இது தேசத்துரோகத்தின் எல்லையாகும், இப்போது அது கண்டிப்பாக முடிவடைய வேண்டும்.
இந்த முற்றுகை போராட்டத்திற்க்கு முற்றுப்புள்ளி வைக்கவும், ஜனாதிபதி டிரம்ப் தனது உறுதிமொழியை நிறைவேற்றவும், அரசியலமைப்பை பாதுகாக்கவும் இப்போது தேசிய தொலைக்காட்சியில் தோன்றுமாறு நான் அழைக்கிறேன். இன்று நாம் பார்ப்பதை விட அமெரிக்கா மிகவும் சிறந்தது என்று பதிவிட்டுள்ளார்.