உலக செய்திகள்

'இந்தியா உடனான கூட்டாண்மையை அமெரிக்கா ஆழப்படுத்தியுள்ளது' - ஆண்டனி பிளிங்கன்

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜி-7 நாடுகளுடன் அமெரிக்கா நெருக்கமாக இணைந்துள்ளது என ஆண்டனி பிளிங்கன் தெரிவித்தார்.

தினத்தந்தி

வாஷிங்டன்,

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"இந்தியா உடனான கூட்டாண்மையை அமெரிக்கா ஆழப்படுத்தியுள்ளது. குவாட் கூட்டணி மூலம் இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் ஒத்துழைப்பை மேம்படுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜி-7 நாடுகளுடன் அமெரிக்கா முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நெருக்கமாக இணைந்துள்ளது."

இவ்வாறு ஆண்டனி பிளிங்கன் தெரிவித்தார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்