உலக செய்திகள்

அமெரிக்கா - வட கொரியா ரகசிய பேச்சு?

அமெரிக்காவும், வட கொரியாவும் ரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தினத்தந்தி

வாஷிங்டன்

இந்த ரகசிய பேச்சுவார்த்தைகள் பல மாதங்களாகவே நடைபெறுவதாகவும் அமெரிக்க வெளியுறவு வட்டாரங்களை சுட்டிக்காட்டி சில மூத்த அதிகாரிகள் செய்தியை கசிய விட்டுள்ளனர்.

அதிபர் டிரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அப்பிரதேசத்தில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் ரகசிய பேச்சுக்கள் பல மாதங்களாகவே நீடிப்பதாக வெளியாகியுள்ள தகவல் மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது.

இப்பேச்சுவார்த்தைகள் ஜோசஃப் யுன் எனும் வடகொரிய கொள்கை வகுப்பாளருக்கும், ஐநா அவையில் இடம் பெற்றுள்ள மூத்த தூதர் பாக் சோங் இல் என்பவருக்கும் இடையில் நடைபெறுவதாகவும் பெயர் சொல்ல விரும்பாத அந்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை