உலக செய்திகள்

உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா இரட்டை வேடம் - ரஷியா குற்றச்சாட்டு

உக்ரைன் பிரச்சினையில் அமெரிக்காவும், அதன் கூட்டாளி நாடுகளும் இரட்டை வேடம் போடுவதாக ரஷியா குற்றம் சாட்டியுள்ளது.

மாஸ்கோ,

ஜெனீவா நகரில் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 49-வது அமர்வு நடைபெற்றது. அதில் ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லவ்ரோவ் பேசியதாவது:-

அமெரிக்காவும், அதன் கூட்டாளி நாடுகளும் எண்ணற்ற மனித உரிமை மீறல்களில் நேரடியாக சம்பந்தப்பட்டவை. யூகோஸ்லோவியா, ஈராக், லிபியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் அப்பாவி மக்களை கொன்ற நாடுகள்.

அப்படிப்பட்ட நாடுகள் உக்ரைன் பிரச்சினையில் ரஷிய நடவடிக்கையை விமர்சிப்பதன் மூலம் இரட்டை வேடம் போடுகின்றன. இப்போது கூட ஐரோப்பிய நாடுகள், உக்ரைனுக்கு ஆயுதங்கள் அனுப்ப முடிவு செய்துள்ளன.

ஆனால் ரஷியாவை பொறுத்தவரை, ரஷியர்கள் அல்லது உக்ரைன் மக்களின் உயிர், அமெரிக்கர் அல்லது ஐரோப்பியரின் உயிருக்கு சற்றும் குறைந்தது அல்ல.

இவ்வாறு அவர் பேசினார்.

பெண் விமானிகள் குறித்து அஜித் பவார் வெளியிட்ட பழைய பதிவு வைரல்

இனி சில்லறை பிரச்சினை வராது.. ஏடிஎம்களில் விரைவில் 10, 50 ரூபாய் நோட்டுகள்?

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இபிஎப்ஓ சம்பள உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்கிறதா?

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது