உலக செய்திகள்

அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட ஈரான் நாட்டு பெண் பத்திரிகையாளர் 11 நாட்களுக்கு பின் விடுவிப்பு

அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட ஈரான் நாட்டு பெண் பத்திரிகையாளர் 11 நாட்களுக்கு பின் விடுவிக்கப்பட்டார்.

தினத்தந்தி

வாஷிங்டன்,

ஈரான் நாட்டில் உள்ள பிரெஸ் என்ற தொலைக்காட்சியில் செய்தி தொகுப்பாளராக இருந்து வருபவர் மர்ஜி ஹாசேமி (வயது 59). இவர் கடந்த சில நாட்களுக்கு முன் தனது உறவினர்களை சந்திப்பதற்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.

அவரை செயிண்ட் லூயிஸ் பகுதியில் எப்.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். அதன்பின் வாஷிங்டன் நகருக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த ஒரு வாரத்திற்கும் மேல் பதற்றம் நிலவியது.

இதன்பின்பு, குற்ற வழக்கு ஒன்றின் விசாரணையில் இவர் சாட்சியாக உள்ளார் என்று அமெரிக்க அதிகாரிகள் பின்னர் தெரிவித்தனர்.

இந்த நிலையில், ஹாசேமி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளார். இதனை அமெரிக்காவில் உள்ள ஈரான் நாட்டு தூதரக அளவிலான உயரதிகாரியான மெஹ்தி அடேபேட் என்பவர் உறுதி செய்துள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்