உலக செய்திகள்

ஐ.எஸ். தலைவன் அல்-பாக்தாதி கொல்லப்பட்டதாக எங்களிடம் ஆதாரங்கள் இல்லை - பெண்டகன்

ஐ.எஸ். பயங்கரவாத இயக்க தலைவன் அல்-பாக்தாதி கொல்லப்பட்டதாக எங்களிடம் ஆதாரங்கள் இல்லை என பெண்டகன் கூறிஉள்ளது.

தினத்தந்தி

வாஷிங்டன்,

ஈராக் மற்றும் சிரியாவில் செயல்பட்ட ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை உலக நாடுகளின்படை அழிக்கும் பணியில் தீவிரமாக இறங்கி உள்ளது. ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைவசம் இருந்த மொசூல் நகரத்தை அந்நாட்டு ராணுவம் அமெரிக்க படை உதவியுடன் மீட்டு உள்ளது. பல்வேறு பகுதிகளில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தோல்வியை தழுவி வருகின்றனர். அவர்களுடைய அழிகாலம் நெருங்கிக் கொண்டே வருகிறது. இந்நிலையில் சிரியாவில் நடந்த தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்க தலைவன் அல்-பாக்தாதி கொல்லப்பட்டான் என தகவல்கள் வெளியாகியது. சிரிய ஊடகங்களும் தகவல்களை வெளியிட்டது. ரஷியாவும் அல்-பாக்தாதி கொல்லப்பட்டதாக தெரிவித்தது.

சிரியாவின் ராக்காவின் தெற்கு புறநகர் பகுதிகளில் நடைபெற்ற கூட்டத்தில் 30 பயங்கரவாத குழு தலைவர்களும், சுமார் 300 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது பயங்கரவாத இயக்கம் தரப்பில் மறுக்கப்பட்டது. அல்-பாக்தாதி கொல்லப்பட்டதாக நம்பப்பட்டு வருகிறது. இவ்விவகாரம் தொடர்பான தகவல்களை அமெரிக்கா உறுதி செய்யாமல் இருந்தது. சிரியாவில் செயல்படும் இங்கிலாந்தின் கண்காணிப்பு குழு அல்-பாக்தாதி கொல்லப்பட்டதாக தெரிவித்து உள்ளது.

இப்போது ஐ.எஸ். பயங்கரவாத இயக்க தலைவன் அல்-பாக்தாதி கொல்லப்பட்டதாக எங்களிடம் ஆதாரங்கள் இல்லை என பெண்டகன் கூறி உள்ளது.

அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பெண்டகனின் தலைவர் ஜிம் மாத்திஸ் பேசுகையில், அல்-பாக்தாதி கொல்லப்பட்டதை நான் உறுதிசெய்ய முடியாது என கூறிஉள்ளார். அல்-பாக்தாதி கொல்லப்பட்டதாக எங்களுக்கு தெரியவந்தால், உங்களுக்கு தெரிவொப்போம். இப்போது, என்னால் இதனை (அல்-பாக்தாதி சாவு) மறுக்கவும் முடியாகும், உறுதி செய்யவும் முடியாது, என கூறிஉள்ளார் ஜிம் மாத்திஸ். அல்-பாக்தாதி சாவு உறுதிசெய்யும் வரையில் நாங்கள் அவன் உயிருடன் உள்ளதாகவே கருதுவோம், இதனை உறுதி செய்ய எங்களுடம் ஆதாரமும் கிடையாது என கூறிஉள்ளார். அல்-பாக்தாதி கொல்லப்பட்டதாக கூறப்படுவதும், மறுக்கப்படுவதும் தொடர் சம்பவமாக இருந்து வருகிறது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது