வாஷிங்டன்
நடாலியா வசெல்நிட்ஸ்காயா எனும் அந்த பெண் வழக்கறிஞருக்கு செப்டெம்பர் 2015 லும், பிப்ரவரி 2016 யிலும் பலமுறை அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் ஜூனியர் டிரம்ப்பை சந்தித்தப் போது சிறப்பு குடியேற்றமல்லாத பணிபுரியும் விசா அளிக்கப்பட்டிருந்தார்.
இவர்களின் சந்திப்பு சர்ச்சையை கிளப்பியுள்ளது ஒருபுறம் என்றால் அவர் ஒரு வழக்கில் ரஷ்ய நிறுவனம் ஒன்றின் சார்பில் வாதாட சிறப்பு அனுமதியையும் பெற்றிருந்தார். இந்த அனுமதியை அமெரிக்க சட்டத்துறை வழங்க வேண்டும். அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்காட இந்த அனுமதி தேவைப்படும்.
இந்த அனுமதி நியூயார்க்கிலுள்ள அமெரிக்க வழக்கறிஞர் ஒருவரின் அலுவலகத்திலிருந்து பெறப்பட்டுள்ளது.
இத்தகவல்களை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
இந்த வழக்கறிஞரிடம் ஹிலாரி கிளிண்டன் தொடர்பான ரகசிய தகவல் இருக்கிறது என்று கூறி ஜூனியர் டிரம்பை சந்திக்க வைத்ததாக கூறப்பட்டது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்தது என்ற சர்ச்சை வெடித்தப் பிறகு ஜூனியர் டிரம்ப் ரஷ்ய பெண் வழக்கறிஞரை சந்தித்ததை ஒப்புக்கொண்டார். ஆனால் வழக்கறிஞருடன் குழந்தைகளை தத்தெடுப்பது குறித்து விவாதித்ததாகவும், மாக்னிட்ஸ்கீ சட்டத்தைக் குறித்து விவாதித்ததாகவும் ஜூனியர் டிரம்ப் கூறியிருந்தார்.