உலக செய்திகள்

ஹாங்காங் தேசிய பாதுகாப்புச் சட்டம்:சீன கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரிகள் அமெரிக்கா வர தடை

ஹாங்காங் தேசிய பாதுகாப்புச் சட்டம் தொடர்பாக சீன கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரிகள் மீது அமெரிக்கா விசா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

வாஷிங்டன்

ஹாங்காங்கிற்கு எதிராக தேசிய பாதுகாப்பு சட்டத்தை இயற்றிய சீனாவின் ஆளும்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியினர் அமெரிக்கா வர விசா வழங்கப்படாது என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ அறிவித்துள்ளார்.

வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய மைக் பாம்பியோ ஹாங்காங்கின் சுதந்திரத்தை பறித்த சீன கம்யூனிஸ்ட் கட்சியை தண்டிக்கப் போவதாக ஜனாதிபதி டிரம்ப் உறுதியளித்திருந்ததன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

சீனா- இங்கிலாந்து கூட்டு பிரகடனத்தில் ஹாங்காங்கின் இறையாண்மை பாதுகாக்கப்படும் என்று உறுதியளித்த சீனா, தற்போது மனிதஉரிமை மீறலில் ஈடுபட்டு வருகிறது. ஜனநாயக ரீதியான போராட்டம் நடத்துவோரைக் கைது செய்து அத்துமீறல்களில் ஈடுபடும் அதிகாரிகளுக்கும் விசா கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது என்று கூறினார்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை