Image Courtesy: AFP 
உலக செய்திகள்

#லைவ் அப்டேட்ஸ்: புதினை பதவியிலிருந்து தூக்க திட்டமா?... போரிஸ் ஜான்சன் விளக்கம்!

உக்ரைனின் மரியூபோல் நகரில் இன்று மனிதாபிமான அடிப்படையில் இன்று ஒரு நாள் மட்டும் போர் நிறுத்தம் செய்யப்படுகிறது.

தினத்தந்தி

கீவ்,

உக்ரைன் மீது ரஷியா 36-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் தொடர்பாக இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் பின்வருமாறு:-

மார்ச் 31, 8.45 PM

செர்னொபெல் அனு உலை பகுதியில் இருந்து ரஷிய படைகள் பின்வாங்கத்தொடங்கி விட்டன என்று உக்ரைன் அனு உலை அமைப்பு தெரிவித்துள்ளது.

மார்ச் 31, 3.11 PM

ரஷிய வீரர்கள் சொந்த நாட்டு போர் விமானங்களையே சுட்டு வீழ்த்துகின்றனர் - இங்கிலாந்து உளவுத்துறை

மார்ச் 31, 2.30 P.M

புதினை பதவி நீக்கம் செய்ய முயற்சிக்கவில்லை என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

ரஷியப் படை யெடுப்பில் இருந்து உக்ரைனியர்களை பாதுகாப்பதில் இங்கிலாந்து கவனம் செலுத்துவதாகவும், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை பதவியில் இருந்து நீக்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். மரியுபோல் போன்ற ரஷிய படைகளால் சுற்றி வளைக்கப்பட்ட நகரங்களுக்கு மனிதாபிமான நிவாரணம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்ய இங்கிலாந்து முயன்று வருவதாக போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மார்ச் 31, 1.30 P.M

உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள டொனெட்ஸ்க் பகுதியில் ரஷியப் படைகள் தடை செய்யப்பட்ட பாஸ்பரஸ் குண்டுகளைப் பயன்படுத்தியதில் நான்கு குழந்தைகள் உட்பட 11 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் அரசு குற்றம்சாட்டி உள்ளது.

ரஷ்யா பாஸ்பரஸ் குண்டுகளைப் பயன்படுத்தியதாக உக்ரைன் அதிகாரிகள் பலமுறை குற்றம் சாட்டினர். இந்த குற்றச்சாட்டை ரஷியா தொடர்ந்து மறுத்து வருகிறது.

1977 ஜெனிவா உடன்படிக்கை பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்துவதைத் தடை செய்கிறது.

மார்ச் 31, 12.30 P.M

மரியுபோல் நகரில் இருந்து மக்களை வெளியேற்ற 45 பஸ்களை அனுப்பிய உக்ரைன்

உக்ரைனின் மரியுபோல் நகரில் குடிமக்களை வெளியேற்றுவதற்காக போர் நிறுத்தத்தை ரஷியா அறிவித்துள்ளது. இதனையடுத்து மரியுபோல் நகரில் இருந்து மக்களை வெளியேற்றும் முயற்சியில் உக்ரைன் ஈடுபட்டு வருகிறது. முற்றுகையிடப்பட்ட நகரில் இருந்து மக்களை வெளியேற்ற உக்ரைன் 45 பஸ்களை அனுப்பியுள்ளது.

மனிதாபிமான பொருட்களை வழங்கவும், இடிபாடுகளில் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்டு கொண்டு வரவும் உக்ரைன் அரசு ஏற்பாடு செய்துள்ள 45 பஸ்கள் மரியுபோலுக்கு புறப்பட்டுள்ளது என்று துணைப் பிரதமர் இரினா வெரேஷ்சுக் கூறினார்.

மார்ச் 31, 11.30 A.M

உக்ரைனிலிருந்து 1 லட்சம் அகதிகளை ஏற்றுக் கொள்ள நடவடிக்கை - அமெரிக்கா

உக்ரைன் மீது ரஷிய படையெடுப்பைத் தொடர்ந்து அந்நாட்டிலிருந்து வெளியேறிய ஒரு லட்சம் அகதிகளை ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்க அமெரிக்கா தயாராகி வருகிறது.

அமெரிக்காவின் சாக்ரமெண்டோ மற்றும் சீயாட்டில் பகுதிகளில் ஏற்கனவே அகதிகளுக்கான குடில்கள், உணவுப் பொருள்கள் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் செய்து வைக்கப்பட்டுள்ளன.

உக்ரைனில் போர் முடிந்து, அந்நாட்டு மக்கள் மீண்டும் எப்போது குடியமர்த்தப்படுவார்கள் என்பது தெரியாத நிலையில், அமெரிக்காவில், ஒரு லட்சம் அகதிகளை தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஏற்கனவே, விமானம் அல்லது பல்வேறு நாட்டு எல்லைகள் வழியாக அமெரிக்காவுக்கு வரும் உக்ரைன் மக்களுக்குத் தேவையான உதவிகள் செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது உக்ரைனிலிருந்து 1 லட்சம் அகதிகளை ஏற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மார்ச் 31, 10.30 A.M

புதின் தவறாக வழிநடத்தப்படுகிறார் - அமெரிக்கா

ரஷிய அதிபர் புதின் ராணுவத்தால் தவறாக வழிநடத்தப்படுவதாகவும் அதனால் அவருக்கும் ராணுவத் தலைமைக்கும் இடையே சுமூகமான சூழல் இல்லை எனவும் வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மார்ச் 31, 9.30 A.M

யூரேக்களையே செலுத்த ரஷியா அனுமதிக்க வேண்டும் - ஜெர்மனி

ரஷியாவிடமிருந்து ஐரேப்பிய நாடுகள் வாங்கும் இயற்கை எரிவாயுவிற்கு ஈடாக யூரேக்களையே செலுத்த ரஷியா அனுமதிக்க வேண்டும் எனவும் மாறாக ரூபில்களை செலுத்தச் செல்வது, அச்சுறுத்துவது பேல் உள்ளது என ஜெர்மனி தெரிவித்துள்ளது.

மார்ச் 31, 8.30 A.M

மரியூபேல் நகரில் ஒரு நாள் பேர் நிறுத்தம்

உக்ரைனின் மரியூபேல் நகரில் இன்று மனிதாபிமான அடிப்படையில் இன்று ஒரு நாள் மட்டும் பேர் நிறுத்தம் செய்யப்படுகிறது. மக்கள் வெளியேறுவதற்கு ஏதுவாக ராணுவ நடவடிக்கை நிறுத்தப்படுவதாக ரஷியா தெரிவித்துள்ளது. மரியூபேல் நகரம் ரஷிய கட்டப்பாட்டுக்குள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மார்ச் 31, 5.51 a.m

துருக்கியில் ரஷியா - உக்ரைன் இடையே ஏப்ரல் 1 ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்குகிறது.

மார்ச் 30 ஆம் தேதியன்று துருக்கியில் சமீபத்திய சுற்று பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த பின்னர் உக்ரைன் மூத்த அதிகாரி ஒருவர் இந்த தேதியை அறிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

மார்ச் 31, 4.21 a.m

செர்னோபில் அணுசக்தி தளத்தில் இருந்து ரஷியர்கள் வெளியேறத் தொடங்கி உள்ளனர் என்று பென்டகன் தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது தாக்குதலை நடத்தி வரும் ரஷியா முதல் நாளில் வடக்கு உக்ரைனில் உள்ள செர்னோபில் அணு உலையை அந்நாட்டு ராணுவம் கைப்பற்றி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இது தொடர்பாக உக்ரைன் அரசு கூறுகையில், செர்னோபில் அணு உலையை ரஷியா ஆக்கிரமிப்பாளர்கள் கைப்பற்றி உள்ளனர். இதனால் கோடிக்கணக்கான உயிர்கள் அச்சுறுத்தலில் உள்ளன என தெரிவித்தது.

ஆனால், செர்னோபில் அணு உலை மீது பயங்கரவாத அமைப்புகளும், தேசியவாத குழுக்களும் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என்பதால் அணு உலையைப் பாதுகாக்கவே அதனைக் கைப்பற்றி உள்ளோம் என ரஷிய ராணுவ அமைச்சகம் தெரிவித்தது. இந்நிலையில், உக்ரைனில் உள்ள செர்னோபில் அணு உலையில் இருந்து ரஷிய படைகள் வெளியேற தொடங்கியுள்ளன என அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

மார்ச் 31, 03.42 a.m

கிவ்வைச் சுற்றியுள்ள 20 சதவீத படைகளின் கீழ் ரஷியா மீண்டும் நிலைபெறத் தொடங்கி வருவதாக பென்டகன் தெரிவித்துள்ளது.

மார்ச் 31, 02.46 a.m

ராணுவ நடவடிக்கை திரும்ப பெறுகிறோம் என்று தெரிவித்த ரஷியா: நாங்கள் யாரையும் நம்பவில்லை - உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி

இதுதொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறுகையில், ராணுவ நடவடிக்கைகளைத் திரும்பப் பெறுவதற்கான ரஷிய சபதத்தை நாங்கள் நம்பவில்லை. கிழக்கில் மேலும் சண்டைக்கு தனது ராணுவம் தயாராகி வருகிறது. நாங்கள் யாரையும் நம்பவில்லை, ரஷியாவின் ஒரு வார்த்தையை கூட நம்பவில்லை. ரஷிய வீரர்கள் கிழக்கு டான்பாஸ் பிராந்தியத்தைத் தாக்க மீண்டும் ஒருங்கிணைத்து வருகின்றனர். நாங்கள் எதையும் கொடுக்க மாட்டோம், எங்கள் பிரதேசத்தின் ஒவ்வொரு சதுர அடிக்காகவும் நாங்கள் போராடுவோம் என்று அவர் தெரிவித்தார்.

மார்ச் 31, 1.55 a.m

குடிமக்களை வெளியேற்றுவதற்காக மரியுபோலில் போர் நிறுத்தத்தை ரஷியா அறிவித்தது என்று தகவல் வெளியாகி உள்ளது.

மார்ச் 31, 01.25 a.m

இன்று அறிவிக்கப்பட்ட ஈரானின் பொருளாதாரத் தடையான அணுசக்தி ஒப்பந்தம் எட்டப்பட்டாலும் அது அப்படியே இருக்கும் - வெள்ளை மாளிகை

மார்ச் 31, 01.15 a.m

ரஷியா மீது உக்ரைன் கூடுதல் பொருளாதாரத் தடைகளுக்கான விருப்பங்களை அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளது என்றும் உக்ரைன் போர் குறித்த ஆலோசகர்களால் புதின் தவறாக வழிநடத்தப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

மார்ச் 31, 01.11 a.m

இந்திய தூதர் நியமனம் முழு செனட் வாக்குகளையும் விரைவாகப் பெற வேண்டும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

மார்ச் 31, 01.05 a.m

புதின் மீதான உளவுத்துறையின் ஆதாரங்கள் பற்றி எதையும் வெளியிட முடியாது என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

மார்ச் 31, 01.00 a.m

புதினையோ அல்லது ரஷிய இராணுவ நடத்தையையோ மாற்றுவது அமெரிக்காவின் நோக்கம் அல்ல என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

மார்ச் 31, 12.32 a.m

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனுடன், இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பயனுள்ள உரையாடலை நடத்தினார். அதில் இருதரப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வது மற்றும் இந்தோ-பசிபிக், உக்ரைன் மற்றும் உலகப் பொருளாதாரம் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

மார்ச் 31, 12.05 a.m

ரஷியப் படைகள் கீவ் மற்றும் மற்றொரு நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் குண்டுவீசித் தாக்குதல் நடத்திய சில மணி நேரங்களிலேயே, பேச்சுவார்த்தைகளுக்கு உதவ அந்த இடங்களில் ராணுவ நடவடிக்கைகளைத் திரும்பப் பெறுவதாக உறுதியளித்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர். நாட்டின் பிற பகுதிகளில் குண்டுவீச்சு தாக்குதல்கள் மற்றும் தீவிரப்படுத்தப்பட்ட ரஷியாவின் ஆக்ரமிப்புகள் திரும்ப பெறுதல் போன்றவை, போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் பேச்சுவார்த்தைகளில் உடனடியாக முன்னேற்றமும் ஏற்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்