உலக செய்திகள்

இந்த வாரம் அமெரிக்க கடற்படை தளபதி இந்தியா வருகை

அமெரிக்க கடற்படை தளபதி மைக் கில்டே இந்த வாரம் இந்தியா வருகிறார். இந்த பயணத்தின்போது இந்திய கடற்படை தளபதி கரம்பிர் சிங் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளுடனும், அரசு அதிகாரிகளுடனும் அவர் சந்திப்புகளை நடத்துகிறார்.

இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையே வளர்ந்து வரும் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் இந்த பயணம் நடப்பதாக அமெரிக்க கடற்படை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

அதில் கில்டே கூறுகையில், எந்த தவறும் செய்யாதீர்கள், இந்தியா எங்கள் நெருங்கிய பங்காளிகளில் ஒன்றாகும். எங்கள் உறவு சுதந்திரமான மற்றும் வெளிப்படையான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் வலுவாக உள்ளது என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்திய கடற்படை தளபதியை சந்தித்து, பரஸ்பர ஒத்துழைப்புக்கான அம்சங்கள் பற்றி விவாதிக்க ஒரு சிறந்த வாய்ப்பாக இந்த பயணம் அமையும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள அவர், சந்தேகமில்லாமல், நாம் பங்குபெற மற்றும் ஒத்துழைக்கக்கூடிய பல பகுதிகள் உள்ளன என்றும் கூறியுள்ளார்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு