உலக செய்திகள்

சுத்தியலால் தாக்கப்பட்ட அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகரின் கணவர் பால் பெலோசிக்கு தலையில் அறுவை சிகிச்சை!

வீட்டுக்குள் ஒரு மர்ம நபர் அத்துமீறி நுழைந்து நான்சி பெலோசியின் கணவர் பால் பெலோசியை சுத்தியலால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றார்.

வாஷிங்டன்,

அமெரிக்க நாடாளுமன்ற பெண் சபாநாயகர் நான்சி பெலோசி. இவர் சில மாதங்களுக்கு முன்பு, தைவானுக்கு பயணம் செய்து, சீனாவின் எதிர்ப்புக்கு ஆளானவர்.

நான்சி பெலோசியின் வீடு, சான் பிரான்சிஸ்கோவில் உள்ளது. நேற்று காலையில், அந்த வீட்டுக்குள் ஒரு மர்ம நபர் அத்துமீறி நுழைந்து நான்சி பெலோசியின் கணவர் பால் பெலோசி சுத்தியலால் கை, கால்கள், தலையில் கடுமையாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றார்.

சம்பவத்தின்போது, நான்சி பெலோசி, வீட்டில் இல்லை. காயமடைந்த பால் பெலோசி, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தலையில்  அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.அவர் விரைவில் குணமடைவார் என்று எதிர்பார்ப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கணவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தவர்களுக்கும், டாக்டர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.தாக்குதலில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...