உலக செய்திகள்

ஜோ பைடன் பேத்திக்கு வெள்ளை மாளிகையில் திருமணம்: எளிமையான முறையில் நடந்தது

ஜோ பைடன் பேத்திக்கு வெள்ளை மாளிகையில் எளிமையான முறையில் திருமணம் நடந்தது.

தினத்தந்தி

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் பேத்தி நவோமி பைடன். வாஷிங்டனில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவர் ஜோ பைடனின் மூத்த மகனான ஹன்டர் பைடன் மற்றும் அவரின் முன்னாள் மனைவி கேத்தலின் பூலேவுக்கு பிறந்தவர் ஆவார். 28 வயதான நவோமி பைடனும், சட்டக்கல்லூரி மாணவரான 24 வயதான பீட்டர் நீல்லும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் இவர்களின் திருமணம் நேற்று முன்தினம் வெள்ளை மாளிகையில் எளிமையான முறையில் நடந்தது.

ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் தலைமையில் நடைபெற்ற திருமணத்தில் உறவினர்கள், நண்பர்கள் சுமார் 250 பேர் கலந்து கொண்டனர். ஜனாதிபதி குடும்ப உறுப்பினர்களின் திருமணங்கள் மற்றும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் அரிதாகவே வெள்ளை மாளிகையில் நடைபெறும்.

அந்த வகையில் சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளை மாளிகையில் நடைபெற்ற முதல் திருமண நிகழ்ச்சி இதுவாகும். 1812-ம் ஆண்டில் தற்போது வரை வெள்ளை மாளிகையில் வெறும் 19 திருமணங்கள் மற்றும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளே நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை