உலக செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட சென்னை பெண் கமலா ஹாரீசுக்கு வாய்ப்பு?

அமெரிக்காவில் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கீழ்சபையான பிரதிநிதிகள் சபையை எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி கைப்பற்றியது.

தினத்தந்தி

வாஷிங்டன்,

2020ம் ஆண்டு நடக்க உள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அந்தக் கட்சியின் சார்பில் போட்டியிடப்போவது யார் என்ற கேள்வி எழுந்து வருகிறது.

குடியரசு கட்சி சார்பில் மீண்டும் டிரம்ப் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

அதே வேளையில் ஜனநாயக கட்சி சார்பில் முதல் இந்து பெண் எம்.பி.யான துளசி கப்பார்ட் போட்டியிடக்கூடும் என தகவல்கள் வெளி வந்தன.

இப்போது இந்திய வம்சாவளியை சேர்ந்த முதல் பெண் செனட் சபை எம்.பி., என்ற பெயரைப்பெற்றுள்ள கமலா ஹாரீசுக்கு (வயது 54) அந்த வாய்ப்பு கிடைக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர் அங்கு கலிபோர்னியா மாகாணம் ஓக்லாந்தில் பிறந்தாலும் கூட பூர்வீகம், சென்னைதான். இவரது தாயார் சியாமளா கோபாலன் சென்னையில் பிறந்தவர்.

இவர் பெண் ஒபாமா என அமெரிக்காவில் பெயர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு மாதத்துக்கு முன்பு அவர் இயோவா மாகாணத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அவரது கூட்டங்களுக்கு ஒபாமாவுக்கு கூடியதுபோல கூட்டம் கூடியதாக தகவல்கள் கூறுகின்றன.

கமலா ஹாரீஸ், ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் களம் இறங்கக்கூடும் என அமெரிக்க ஊடகங்களில் செய்திகள் உலா வருகின்றன. அவற்றை அவர் ஒப்புக்கொள்ளவும் இல்லை, மறுக்கவும் இல்லை. இவர் ஒபாமாவுக்கு நெருக்கமானவர் ஆவார்.

அமெரிக்காவில் இப்போது ஜனாதிபதி தேர்தல் நடந்து அதில் போட்டியிட்டால், டிரம்பை கமலா ஹாரீஸ் 10 பாயிண்ட் வித்தியாசத்தில் தோற்கடிப்பார் என ஆக்ஸியாஸ் கருத்துக்கணிப்பு கூறுகிறது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்