உலக செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி மாளிகை பணியாளர் தலைவர் நீக்கம்: டிரம்ப் அதிரடி நடவடிக்கை

அமெரிக்க ஜனாதிபதி மாளிகை பணியாளர் தலைவர் நீக்கம் செய்து டிரம்ப் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

தினத்தந்தி

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதி மாளிகையான வாஷிங்டன் வெள்ளை மாளிகையின் பணியாளர்கள் தலைவராக கடந்த ஓராண்டுக்கும் மேலாக இருந்தவர், மிக் முல்வானே.

இவரை ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம் அதிரடியாக நீக்கி விட்டார்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையை ஜனாதிபதி டிரம்பின் நிர்வாகம் சரியாக கையாளவில்லை என்று கடுமையான விமர்சனங்கள் வெளியாகின. இந்த நிலையில்தான், மிக் முல்வானேயை அதிரடியாக நீக்கிவிட்டு, அந்த இடத்துக்கு மார்க் மெடோஸ் என்பவரை டிரம்ப் நியமித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் பல மாதங்களாகவே மிக் முல்வானே ஓரங்கட்டப்பட்ட நிலையில்தான் வைக்கப்பட்டிருந்ததாக வாஷிங்டனில் இருந்து வருகிற தகவல்கள் கூறுகின்றன. அவரை நீக்க வேண்டும் என்று ஏற்கனவே டிரம்ப் முடிவு எடுத்துவிட்டதாகவும், பதவி நீக்க தீர்மான விவகாரம் முடியட்டும் என்றுதான் காத்திருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இப்போது மிக் முல்வானே வடக்கு அயர்லாந்துக்கான அமெரிக்காவின் சிறப்பு தூதராக நியமிக்கப்படுவார் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து