உலக செய்திகள்

வேற்றுகிரகவாசிகள் குறித்த நம்பகமான ஆதாரங்கள் ஏதுமில்லை- அமெரிக்கா பாதுகாப்பு அமைப்பு

சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகள் எல்லாம் அறிவியல் சான்றுகள் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினத்தந்தி

வாஷிங்டன்

வேற்றுகிரகவாசிகள் குறித்த நம்பகமான ஆதாரங்கள் ஏதுமில்லை என்ற போதிலும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் தொடர்பான 650 வழக்குகளை விசாரித்து வருவதாக அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.மேலும் அவற்றில் பெரும்பாலானவை ஒலியை விட இரண்டு மடங்கு வேகத்தில் பறக்கக் கூடியவை.

இது தொடர்பாக பென்டகன் அதிகாரி சீன்கிர்க்பேட்ரிக் கூறியதாவது:-

வேற்றுகிரகவாசிகள் தொடர்பாக எந்த ஒரு வலுவான ஆதாரங்களும் இதுவரை கிடைக்கவில்லை என கூறியுள்ளார்.

பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் இயற்கைக்கு மாறான செயல்பாடுகள் குறித்த பதிவுகள் மிக மிக குறைந்த அளவிலேயே இருக்கிறது.

இவற்றில் எதிலும் வெளிப்படையான என்ஜின் இல்லை என்றும், வெப்ப வெளியேற்றத்தை ஏற்படுத்தவில்லை அவை ரேடாரில் மட்டும் இடையிடையே தோன்றி உள்ளன.

அதேவேளை, வேற்றுகிரகவாசிகள் தொடர்பான ஏதேனும் நம்பகத்தன்மை உடைய ஆதாரங்கள் கிடைத்தால் மக்கள் அதனை பென்டகனுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் என சீன் கிர்க்பேட்ரிக் கேட்டுகொண்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகள் எல்லாம் அறிவியல் சான்றுகள் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை