உலக செய்திகள்

தீவிரவாதத்தை எதிர்க்க அமெரிக்கா, கத்தார் உடன்பாடு

அமெரிக்காவும், கத்தாரும் தீவிரவாதத்தை எதிர்க்க உடன்பாடு ஒன்றை எட்டியுள்ளன.

தினத்தந்தி

தோஹா

கத்தாரின் அண்டை நாடுகள் அதன் மீது தொடர்ச்சியாக தடைகளை விதிக்க எண்ணியுள்ள நிலையில் இந்த உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது குறிபிடத்தக்கதாகும்.

அமெரிக்க வெளியுறவுச் செயலர் ரெக்ஸ் டில்லர்சனும் கத்தாரின் அயலுறவுத்துறை அமைச்சர் ஷேக் முகம்மது அல் தானியும் இது தொடர்பான அறிவிக்கையை தோஹாவில் வெளியிட்டனர்.

இது குறித்து பேசிய டில்லர்சன் இந்த உடன்படிக்கை கடந்த மே மாதம் ரியாத்தில் நடந்த உச்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்றார். அதன் நோக்கம் புவியிலிருந்து தீவிரவாதத்தைத் துடைத்தெறிவதேயாகும் என்று குறிப்பிட்டார் டில்லர்சன்.

அமெரிக்க அதிபரின் வலுவான நோக்கங்களுக்கேற்ப இது போன்ற செயல்பாடுகள் பல்வேறு முனைகளில் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

கத்தாரின் அமைச்சர் ஷேக் முகம்மது கூறும்போது கத்தாரே அப்பிரதேசத்தில் முதலாவதாக இந்த இருதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் தீவிரவாத எதிர்ப்பு நிதி தொடர்பானது. கத்தாரை பின்பற்றி அதன் மீது முற்றுகையை மேற்கொண்டு வரும் நாடுகளும் இந்த இருதரப்பு உடன்படிக்கையை அமெரிக்காவுடன் செய்து கொள்ள வேண்டும் என்றார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்