உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைவீரர்கள் 2 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் நடந்த ஒரு தாக்குதலில் அமெரிக்க படை வீரர்கள் 2 பேர் கொல்லப்பட்டனர். இதை அமெரிக்க, நேட்டோ படைகள் தெரிவித்துள்ளன. இது குறித்த கூடுதல் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

காபூல்,

ஆப்கானிஸ்தானில் இந்த ஆண்டில் பலியான அமெரிக்க படை வீரர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்க கொள்கைப்படி, பலியானவர்கள் பற்றிய விவரத்தை அவர்களது குடும்பத்தினரிடம் தெரியப்படுத்திய பின்னர்தான், அவர்களைப்பற்றிய முறையான அறிவிப்பு வெளியிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க படை வீரர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

SCROLL FOR NEXT