உலக செய்திகள்

ஈராக்கில் அமெரிக்க கூட்டுப்படைகள் தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 20 பேர் பலி

ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது உள்நாட்டு படைகளுடன், அமெரிக்க கூட்டுப்படைகளும் இணைந்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றன.

தினத்தந்தி

பாக்தாத்,

தொடர்ந்து பாதுகாப்பு படைகளை குறி வைத்து தாக்குதல்களை நடத்தி வருகிற ஐ.எஸ். பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த முடியாமல் இந்த படைகள் திணறி வருகின்றன.

இந்த நிலையில் அன்பார் மாகாணத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் சொர்க்கம் என கருதப்படக்கூடிய அன்னா நகரத்தில் அமெரிக்க கூட்டுப்படைகள் அதிரடியாக குண்டு மழை பொழிந்தன.

இந்த வான் தாக்குதலில் 20 ஐ.எஸ். பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக ஈராக்கின் ஜசிரா செயல்பாடுகள் பிரிவின் தலைவர் காசிம் முகமதி நேற்று கூறுகையில், ஐ.எஸ். பயங்கரவாதிகளின் சொர்க்கமாக கருதப்படக்கூடிய அன்னா நகரத்தில் கூட்டுப்படைகள் நடத்திய குண்டுவீச்சில் 20 பேர் கொல்லப்பட்டனர். அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் மனித கேடயங்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். அதற்கு மத்தியில் இந்த குண்டுவீச்சு நடந்துள்ளது என்று குறிப்பிட்டார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு