உலக செய்திகள்

லிபியாவில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது

லிபியாவில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.

தினத்தந்தி

வாஷிங்டன்,

எண்ணெய் வளமிக்க லிபியாவில் சர்வாதிகாரியாக திகழ்ந்த கடாபி 2011-ம் ஆண்டு ஆட்சி அதிகாரத்தில் இருந்து வீழ்த்தப்பட்டது முதல் அங்கு அரசியல் குழப்பம் நிலவி வருகிறது.

2015-ம் ஆண்டு முதல் லிபியா இரண்டாக பிளவுபட்டு இரு அரசுகளை கொண்டுள்ளது.

தலைநகர் திரிபோலியில் ஒரு அரசும், நாட்டின் கிழக்கு பகுதியில் மற்றொரு அரசும் இயங்கி வருகின்றன. அங்கு பயங்கரவாத குழுக்களும் இயங்கி வருகின்றன.

கிழக்கு பகுதியில் உள்ள அரசு, திரிபோலியை கைப்பற்ற கடந்த ஏப்ரல் மாதம் முதல் முயற்சித்து வருகிறது. அங்கு கடந்த புதன்கிழமையன்று, கிழக்கு பகுதி அரசால் இத்தாலியின் ஆளில்லா விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.

இதற்கிடையே லிபியாவில் பாதுகாப்பு ஏற்பாடுகளையும், பயங்கரவாதிகளை கண்காணிக்கும் பணியிலும் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் ஒன்று ஈடுபட்டிருந்தது.

இந்த ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தங்கள் ஆளில்லா விமானத்தை இழந்துள்ளதாக அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது. ஆனால் அந்த விமானத்துக்கு நேர்ந்த கதி பற்றியோ, அதன் பின்னணி குறித்தோ அமெரிக்க ராணுவம் வாய் திறக்கவில்லை.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு