உலக செய்திகள்

ஈரானுக்கு அமெரிக்கா புதிய எச்சரிக்கை

அமெரிக்கா புதியதாக ஓர் எச்சரிக்கையை ஈரானுக்கு விடுத்துள்ளது.

தினத்தந்தி

வாஷிங்டன்

அதிபரின் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் ஈரானில் நியாயமற்ற வகையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அமெரிக்க பிரஜைகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அப்படி செய்யாவிட்டால் புதிய ஆனால் கடுமையான கட்டுப்பாடுகளை ஈரானின் மீது விதிக்கப்படும் என்றும் அது எச்சரித்துள்ளது.

சென்ற வாரம் முன்னாள் அதிபர் ஒபாமா காலத்தில் செய்துக்கொள்ளப்பட்ட அணு சக்தி தொடர்பான ஒப்பந்தத்தை தொடர்ந்து கடை பிடிப்பது என்று அதிபர் டிரம்ப் முடிவு செய்தார்; தேர்தலில் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யப்போவதாக அவர் வாக்குறுதி அளித்திருந்தார்.

கைதிகளை விடுவிக்கும் இந்த விவகாரம் புதிதாக ஈரானுடம் மோதும் வாய்ப்பை கொடுத்துள்ளது.

அமெரிக்க-சீனப் பிரஜை உட்பட மூன்று பேர் ஈரான் சிறையில் உள்ளனர். சென்ற மாதம் வடகொரியாவில் வார்ம்பியர் எனும் மாணவர் இறந்து போனார். அது போல நியாயமற்ற வகையில் அமெரிக்க பிரஜைகள் வெளிநாட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள நிலைக்கு தீர்வு காண அதிபர் விரும்புகிறார் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஈரானுடன் அமெரிக்காவிற்கு தூதரக உறவுகளில்லை. ஈரானில் இஸ்லாமிய புரட்சி நிகழ்ந்தப்பிறகு 1980 ஆம் ஆண்டு முதல் தூதரக உறவு முறிந்து போனது. ஒபாமா அரசும், பிற மேலை நாடுகளும் இணைந்து 2015 ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் தேதி ஈரானின் அணு சக்தி திட்டங்களை கட்டுப்படுத்தும் திட்டத்தில் கையொப்பமிட்டன. இதன் பிறகு அமெரிக்க ஈரான் உறவில் சிறிது மென்மையான அணுகுமுறை காணப்பட்டது.

அணுசக்தி ஒப்பந்தத்தைக் கடந்து வேறு சில தடைகளை அமெரிக்க அதிபர் விதித்துள்ளார். அதைத் தவிர கைதிகள் விவகாரத்தை கையில் எடுத்துள்ளார் டிரம்ப்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்