வாஷிங்டன்,
சீனாவில் மோசமடைந்து வரும் மனித உரிமை நிலைமை குறித்து பல சட்டமியற்றுபவர்கள் கவலைகளை வெளிப்படுத்திய நிலையில், சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் முஸ்லிம் மக்கள் மீது சீனா நடத்தி வருகிற இனப்படுகொலைக்கு எதிராக அமெரிக்கா பலமாக பேசும் என்று அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி ஆன்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஜோ பைடன் பதவியேற்றதற்கு பிறகு, அடுத்த வாரம் அமெரிக்க மற்றும் சீன உயர் அதிகாரிகளின் நேருக்கு நேர் சந்திப்பு நிகழ உள்ளது. பிளிங்கன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் ஆகியோர் சீனாவின் உயர்மட்ட வெளியுறவுக் கொள்கை அதிகாரிகள், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் சீனாவின் வெளியுறவுத் தலைவர் யாங் ஜீச்சி மற்றும் மாநில கவுன்சிலர் மற்றும் வெளியுறவு மந்திரி வாங் யி ஆகியோரை மார்ச் மாதம் பார்ப்பார்கள் என்று வெள்ளை மாளிகை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.