உலக செய்திகள்

6 நாள் குழந்தையை கைப்பையில் வைத்து கடத்தி வந்த அமெரிக்க பெண் கைது

6 நாள் குழந்தையை கைப்பையில் வைத்து கடத்தி வந்த அமெரிக்க பெண், பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

மணிலா

அமெரிக்காவை சேர்ந்த ஜெனிபர் எரின் டால்போட் என்ற பெண் கடந்த புதன்கிழமை பிலிப்பைன்சின் மணிலா விமான நிலையம் வந்தார். அவர் மீது சந்தேகம் அடைந்த விமான ஊழியர்கள் அவரை போர்டிங் கேட்டில் தடுத்து நிறுத்தி அவரின் கைப்பையில் சோதனை நடத்தினர். அவரது கைப்பையில் பிறந்து 6 நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று இருந்தது கண்டறியப்பட்டது.

குழந்தைக்கு பாஸ்போர்ட், போர்டிங் பாஸ் அல்லது அரசாங்க அனுமதி எதையும் டால்போட் வைத்திருக்கவில்லை என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

குழந்தையுடன் அமெரிக்காவிற்கு செல்ல டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏற டால்போட் திட்டமிட்டிருந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

குழந்தையை கண்டுபிடித்த பிறகு, விமான ஊழியர்கள் குடியுரிமை பணியாளர்களை வரவழைத்தனர், அவர்கள் விமான நிலையத்தில் டால்போட்டை கைது செய்தனர். பின்னர் அவர் தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டார். குழந்தை அரசாங்க நலப் பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்