உலக செய்திகள்

அமெரிக்கா: தரையிறங்கியபோது குலுங்கிய விமானம்; 6 பேர் காயம்

எங்களுடைய பராமரிப்பு குழுவினரின் சோதனைக்கு முன்பே விமானம் பயணிகளின் சேவைக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டது என தெரிவித்து உள்ளது.

ஹவாய்,

அமெரிக்க ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் 271 என்ற எண் கொண்ட விமானம் ஒன்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து புறப்பட்டு மவுய் நகருக்கு சென்றது. விமானத்தில் 167 பயணிகள் மற்றும் 7 ஊழியர்கள் இருந்தனர்.

அந்த விமானம், ஹவாய் தீவில், கஹுலுய் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது, சிறிய அளவில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், விமானத்தில் இருந்த பயணிகளில் ஒருவர் மற்றும் 5 பணியாளர்கள் என மொத்தம் 6 பேர் காயமடைந்தனர்.

இதன்பின்னர், பயணிகள் அனைவரும் கீழே இறங்கியதும், காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்பு அவர்கள் குணமடைந்து வீடு திரும்பினர்.

இதுபற்றி அமெரிக்க ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் வெளியிட்ட செய்தியில், எங்களுடைய பராமரிப்பு குழுவினரின் சோதனைக்கு முன்பே விமானம் பயணிகளின் சேவைக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டது என தெரிவித்து உள்ளது. எங்களுடைய வாடிக்கையாளர்கள் மற்றும் குழுவினரின் பாதுகாப்பே எங்களுக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் தெரிவித்து உள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு