உலக செய்திகள்

அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது

அமெரிக்கா- சீனா இடையிலான முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

தினத்தந்தி

வாஷிங்டன்,

உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே சுமார் 2 ஆண்டுகளாக வர்த்தக போர் நடந்து வந்தது. இந்த வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்ள இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.

இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான முதற்கட்ட ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. சீனாவின் உயர்மட்ட பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் - சீன துணை பிரதமர் லீயு ஹி ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்த முதற்கட்ட ஒப்பந்தம், இரு பொருளாதார சக்திகளுக்கும் இடையிலான பதற்றத்தை குறைக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபோது, தான் சீனாவுக்கு செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று டிரம்ப் கூறினார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை