உலக செய்திகள்

சிரியாவில் அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படை வான்வழி தாக்குதல்; 70 பேர் பலி

கிழக்கு சிரியாவில் அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படை நடத்திய வான்வழி தாக்குதலில் 70 பேர் கொல்லப்பட்டனர்.

தினத்தந்தி

பெய்ரூட்,

சிரியாவில் அரசுக்கு எதிராக உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். ஐ.எஸ். குழுவினரும் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர்.

இவர்களை கட்டுக்குள் கொண்டுவர ராணுவம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படை மற்றும் ரஷ்ய ஆதரவு பெற்ற அரசு படைகள் ஆகியவையும் போரில் இறங்கி உள்ளன. இதில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட லட்சக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர்.

சிரியா நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அரசுக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படையுடன் சிரிய ஜனநாயக படைகளும் இணைந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

அமெரிக்க உதவியுடன் சிரிய ஜனநாயக படைகள், கிழக்கு யூப்ரடீஸ் பகுதியில் ஐ.எஸ். அமைப்பினரை வீழ்த்தி பல்வேறு இடங்களை தங்களது கட்டுக்குள் கொண்டு வந்துள்ளன.

இந்த நிலையில், நாட்டின் கிழக்கே டெயிர் அல்-ஜோர் பகுதியில் பேக்கோஜ் நகரில் 20 ஆயிரம் பொதுமக்கள் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டனர். இதனை அடுத்து மீதமுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் பகுதி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதேபோன்று குடிபெயர்ந்த பொதுமக்கள் மீது அமெரிக்கா தலைமையிலான படைகள் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் 70 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்