பெய்ரூட்,
சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ் பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா தலைமையிலான கூட்டு படைகள் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. சிரியாவின் எண்ணெய் வளம் மிக்க மாகாணமான டேர் எஸ்ஸார் பகுதியில் அமெரிக்க வான்வழி படைகள் குடியிருப்பு பகுதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலில் பொதுமக்களில் 35 பேர் பலியாகினர். அவர்களில் 26 பேர் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் உறவினர்கள் என்றும் சொல்லப்படுகிறது. பலியானவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என சிரியாவின் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.