வியன்னா,
ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் 14 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வது கட்டாயம் என கடந்த இரு மாதங்களுக்கு முன் உத்தேச திட்டத்தை அரசு அறிவித்தது. இந்நிலையில், திருத்தியமைக்கப்பட்ட திட்டத்தின்படி 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெற அரசு தீமானித்துள்ளது.
மசோதா சட்ட வடிவம் பெற்ற பின்னா, பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனரா? என்பது குறித்து வழக்கமான பரிசோதனையின்போது காவல் துறையினா சோதனை செய்வாகள். தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவாகளுக்கு அதுகுறித்த நினைவூட்டுதல் அனுப்பப்படும்.
அதன்பிறகும் தடுப்பூசி செலுத்தி கொள்ளாவிட்டால், தடுப்பூசி செலுத்துவதற்கான நேரத்தை குறிப்பிட்டு சம்பந்தப்பட்டவாகளுக்கு தகவல் அனுப்பப்படும். அதுவும் பின்பற்றப்படாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.